Category: திர்மிதீ

Tirmidhi-837

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

837.


خَمْسُ فَوَاسِقَ يُقْتَلْنَ فِي الحَرَمِ: الفَأْرَةُ، وَالعَقْرَبُ، وَالغُرَابُ، وَالحُدَيَّا، وَالكَلْبُ العَقُورُ


Tirmidhi-3235

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3235. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் சுபுஹ் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வர தாமதமாகிவிட்டது. சூரியன் கிட்டத்தட்ட உதயமாகும் நிலையை நாங்கள் அடைந்தோம். அப்போது, அவர்கள் விரைந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் விரைவாகத் தொழுது முடித்தார்கள். சலாம் கொடுத்தவுடன், சப்தமிட்டு எங்களிடம், “நீங்கள் உங்கள் வரிசைகளிலேயே அப்படியே இருங்கள்!” என்று கூறினார்கள்.

பிறகு எங்களை நோக்கித் திரும்பி, “இந்த காலையில் உங்களை விட்டும் நான் தாமதமானதற்கான காரணத்தை இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். நான் இரவில் எழுந்து உளூச் செய்து, எனக்குக் கடமையாக்கப்பட்ட அளவுக்கு தொழுதேன். அப்போது தொழுகையிலேயே எனக்கு உறக்கம் வந்து ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிவிட்டேன். நான் திடீரென்று (கனவில்) என்னுடைய ரப்பை மிக அழகான தோற்றத்தில் கண்டேன்.

அவன், ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். நான், ‘லப்பைக் ரப்பி!’ (உன் அழைப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன், என் இரட்சகனே!) என்று கூறினேன். அவன், ‘(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டான். நான், ‘எனக்குத் தெரியாது, என் ரப்பே!’ என்று மூன்று முறை கூறினேன்.

(தொடர்ந்து நபி (ஸல்) கூறினார்கள்):

احْتُبِسَ عَنَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ مِنْ صَلَاةِ الصُّبْحِ حَتَّى كِدْنَا نَتَرَاءَى عَيْنَ الشَّمْسِ، فَخَرَجَ سَرِيعًا فَثُوِّبَ بِالصَّلَاةِ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَجَوَّزَ فِي صَلَاتِهِ، فَلَمَّا سَلَّمَ دَعَا بِصَوْتِهِ فَقَالَ لَنَا: «عَلَى مَصَافِّكُمْ كَمَا أَنْتُمْ» ثُمَّ انْفَتَلَ إِلَيْنَا فَقَالَ: ” أَمَا إِنِّي سَأُحَدِّثُكُمْ مَا حَبَسَنِي عَنْكُمُ الغَدَاةَ: أَنِّي قُمْتُ مِنَ اللَّيْلِ فَتَوَضَّأْتُ فَصَلَّيْتُ مَا قُدِّرَ لِي فَنَعَسْتُ فِي صَلَاتِي فَاسْتَثْقَلْتُ، فَإِذَا أَنَا بِرَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ، فَقَالَ: يَا مُحَمَّدُ قُلْتُ: لَبَّيْكَ رَبِّ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: لَا أَدْرِي رَبِّ، قَالَهَا ثَلَاثًا ” قَالَ: ” فَرَأَيْتُهُ وَضَعَ كَفَّهُ بَيْنَ كَتِفَيَّ حَتَّى وَجَدْتُ بَرْدَ أَنَامِلِهِ بَيْنَ ثَدْيَيَّ، فَتَجَلَّى لِي كُلُّ شَيْءٍ وَعَرَفْتُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، قُلْتُ: لَبَّيْكَ رَبِّ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: فِي الكَفَّارَاتِ، قَالَ: مَا هُنَّ؟ قُلْتُ: مَشْيُ الأَقْدَامِ إِلَى الجَمَاعَاتِ، وَالجُلُوسُ فِي المَسَاجِدِ بَعْدَ الصَّلَوَاتِ، وَإِسْبَاغُ الوُضُوءِ فِي المَكْرُوهَاتِ، قَالَ: ثُمَّ فِيمَ؟ قُلْتُ: إِطْعَامُ الطَّعَامِ، وَلِينُ الكَلَامِ، وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ. قَالَ: سَلْ. قُلْتُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الخَيْرَاتِ، وَتَرْكَ المُنْكَرَاتِ، وَحُبَّ المَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ “، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا»


Tirmidhi-1421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1421. யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ»


Tirmidhi-1332

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1332.


«مَا مِنْ إِمَامٍ يُغْلِقُ بَابَهُ دُونَ ذَوِي الحَاجَةِ، وَالخَلَّةِ، وَالمَسْكَنَةِ إِلَّا أَغْلَقَ اللَّهُ أَبْوَابَ السَّمَاءِ دُونَ خَلَّتِهِ، وَحَاجَتِهِ، وَمَسْكَنَتِهِ»،

فَجَعَلَ مُعَاوِيَةُ رَجُلًا عَلَى حَوَائِجِ النَّاسِ


Tirmidhi-1969

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் அநாதைக்காகவும் பாடுபடுகின்றவர்.

1969. கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வழிபட்டு; பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்’.

இதை ஸஃப்வான் பின் சுலைம் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர்வழியாக அறிவிக்கப் பட்டுள்ளது.


«السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ كَالمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ»

حَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ،


Tirmidhi-2465

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2465. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருடைய எண்ணம் மறுமையை நோக்கி இருக்கிறதோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் போதுமென்ற நிலையை உருவாக்கிவிடுவான். அவருடைய காரியங்களை ஒன்றுகூடச் செய்வான். உலகம் சரணடைந்து அவருக்கு ஓடிவரும். யாருடைய எண்ணம், உலகத்தை நாடி இருக்கிறதோ அவருடைய கண்ணுக்கு முன் ஏழ்மையை கொண்டு வருவான். அவருடைய காரியங்களை சிதறடித்து விடுவான் உலகத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அளவு (மட்டும்) வரும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ، وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهُ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا قُدِّرَ لَهُ»


Tirmidhi-1177

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1177.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي طَلَّقْتُ امْرَأَتِيَ البَتَّةَ، فَقَالَ: «مَا أَرَدْتَ بِهَا؟» قُلْتُ: وَاحِدَةً، قَالَ: «وَاللَّهِ؟» قُلْتُ: وَاللَّهِ، قَالَ: «فَهُوَ مَا أَرَدْتَ»


Tirmidhi-2335

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2335. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, “இது என்ன?” என்று கேட்டார்கள். “வீடு பாழடைந்து விட்டது. அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது” என்று கூறினார்கள்.


مَرَّ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نُعَالِجُ خُصًّا لَنَا، فَقَالَ: «مَا هَذَا»؟ فَقُلْنَا قَدْ وَهَى فَنَحْنُ نُصْلِحُهُ، فَقَالَ: «مَا أَرَى الأَمْرَ إِلَّا أَعْجَلَ مِنْ ذَلِكَ»


Tirmidhi-2038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2038. …அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: உஸாமா பின் ஷரீக் (ரலி)


قَالَتِ الأَعْرَابُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَدَاوَى؟ قَالَ: ” نَعَمْ، يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً، أَوْ قَالَ: دَوَاءً إِلَّا دَاءً وَاحِدًا ” قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا هُوَ؟ قَالَ: «الهَرَمُ»


Tirmidhi-22

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சாமல் இருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு கட்டளையிட்டு இருப்பேன்.

இதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.


«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»


Next Page » « Previous Page