Category: திர்மிதீ

Tirmidhi-3474

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3474. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ரு தொழுகைக்கு பின், யாரிடமும் பேசாமல் (கால்களை அகற்றாமல்) இருப்பில் அமர்ந்தவாறு “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

என்று பத்து முறை சொல்கிறவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) பத்து தீமைகள் அழிக்கப்படும். சொர்க்கத்தில் அவருக்கு பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.  அந்த நாள் முழுதும் தீங்கிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும் அவர் ஷைத்தானிடமிருந்தும் பாதுகாக்கப்படுவார். அந்த நாளில் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் பாவத்தை தவிர வேறு எந்த பாவமும்  அவரை அழித்துவிடாது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ فِي دُبُرِ صَلَاةِ الفَجْرِ وَهُوَ ثَانٍ رِجْلَيْهِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ، كُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ، وَكَانَ يَوْمَهُ ذَلِكَ كُلَّهُ فِي حِرْزٍ مِنْ كُلِّ مَكْرُوهٍ، وَحُرِسَ مِنَ الشَّيْطَانِ، وَلَمْ يَنْبَغِ لِذَنْبٍ أَنْ يُدْرِكَهُ فِي ذَلِكَ اليَوْمِ إِلَّا الشِّرْكَ بِاللَّهِ


Tirmidhi-802

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்புப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«الفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ، وَالأَضْحَى يَوْمَ يُضَحِّي النَّاسُ»


Tirmidhi-697

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

697. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ، وَالفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»


Tirmidhi-699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

விரைவாக நோன்பு துறத்தல்.

699. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஸஅத் (ரலி)


«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ»


Tirmidhi-753

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

753.


«كَانَ عَاشُورَاءُ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ، صَامَهُ وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ، فَلَمَّا افْتُرِضَ رَمَضَانُ كَانَ رَمَضَانُ هُوَ الفَرِيضَةُ، وَتَرَكَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ»


Tirmidhi-686

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைப்பது வெறுப்பிற்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

686. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டு இறைச்சி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், ‘உண்ணுங்கள்’ என்று கூறினார்கள். (அங்கிருந்த) மக்களில் சிலர் சாப்பிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘நான் நோன்பு வைத்துள்ளேன்’ என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், (இது ரமளான் மாதத்தின் முதல் நாளா? அல்லது ஷஅபான் மாதத்தின் இறுதி நாளா? எனச்) சந்தேகத்திற்குரிய நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர், அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்’ என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான ஹதீஸ் அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது. மேற்கண்ட அம்மார் வழியாக வந்துள்ள ஹதீஸ் ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டுமென நபித்தோழர்கள், அவர்களுக்கு அடுத்துவந்த தாபிஈன் அறிஞர்களில் பெரும்பாலோர் கருதுகின்றனர்.

ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத்

كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Tirmidhi-87

ஹதீஸின் தரம்: Pending

87. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே உளூச் செய்தார்கள்” என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அதற்கவர்கள், “அபுத்தர்தா உண்மையே கூறினார். நான் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீரை ஊற்றியவன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஃதான் பின் அபீதல்ஹா (ரஹ்)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاءَ، فَتَوَضَّأَ»، فَلَقِيتُ ثَوْبَانَ فِي مَسْجِدِ دِمَشْقَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: صَدَقَ، أَنَا صَبَبْتُ لَهُ وَضُوءَهُ


Tirmidhi-720

ஹதீஸின் தரம்: Pending

720. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வருகிறதோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ ذَرَعَهُ القَيْءُ، فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَنْ اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ»


Tirmidhi-807

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

807. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»


Tirmidhi-1489

ஹதீஸின் தரம்: More Info

1489. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் அவர்களின் முகத்தில் (வெயில்படாமலிருக்க)  மரக்கிளைகளை பிடித்திருந்தவர்களில் நானும் ஒருவனாவேன்.

அந்த உரையில் அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும்  (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

நாயை கட்டி வைத்திருக்கும் வீட்டார்களின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் நன்மை) குறைந்து போய்விடும்; வேட்டையாடுவதற்காகவோ அல்லது விவசாயப் பண்ணைகளை பாதுகாப்பதற்காகவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ளதாகும். இந்த செய்தி ஹஸன் பஸரீ அவர்களின் வழியாக வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


إِنِّي لَمِمَّنْ يَرْفَعُ أَغْصَانَ الشَّجَرَةِ عَنْ وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، فَقَالَ: «لَوْلَا أَنَّ الكِلَابَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا، فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ، وَمَا مِنْ أَهْلِ بَيْتٍ يَرْتَبِطُونَ كَلْبًا إِلَّا نَقَصَ مِنْ عَمَلِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ، إِلَّا كَلْبَ صَيْدٍ، أَوْ كَلْبَ حَرْثٍ، أَوْ كَلْبَ غَنَمٍ»


Next Page » « Previous Page