இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள், ஸாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையை போருக்கு அனுப்பினார்கள். (சில நாட்களுக்கு பிறகு) உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “ஸாரியாவே அந்த மலைக்குள் செல்! ஸாரியாவே அந்த மலைக்குள் செல்!” என்று கூறினார்கள்.
பிறகு, படையின் தூதர் வந்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நாங்கள் போரில் எதிரிகளிடம் சண்டையிட்டோம். அவர்கள் எங்களை தோற்கடிக்கும் நிலைக்கு சென்று விட்டனர். அப்போது ஒருவர், “ஸாரியாவே! அந்த மலைக்குள் செல்! என்று கத்தினார். எனவே நாங்கள், எங்கள் முதுகுகளை மலையை நோக்கியவர்களாக பின்வாங்கி வந்து சண்டையிட்டோம். அதனால் அல்லாஹ் அவர்களை தோல்வியுறச் செய்தான்” என்று கூறினார். அப்போது நாங்கள், உமர் (ரலி) அவர்களே! நீங்கள் தானே அவ்வாறு கத்தினீர்கள்! என்று கூறினோம்.
(dalail-annubuwwah-bayhaqi-2658: 2658)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْقَطَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: «كُنَّا نُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَنْطِقُ عَلَى لِسَانِ مَلَكٍ»
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنَا حَمْزَةُ بْنُ الْعَبَّاسَ الْعُقَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ الْهَيْثَمِ الدَّيْرَعَاقُولِّيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، ح وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ السُّلَمِيُّ أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَعْقُوبَ الْحَجَّاجِيُّ الْحَافِظُ , أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَارِثِ بْنِ جَرِيرٍ الْعَسَّالُ، بِمِصْرَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ،
أَنَّ عُمَرَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا يُدْعَى سَارِيَةَ فَبَيْنَمَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ يَخْطُبُ فَجَعَلَ يَصِيحُ: يَا سَارِيَ , الْجَبَلَ، فَقَدِمَ رَسُولٌ مِنَ الْجَيْشِ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ , لَقِينَا عَدُوَّنَا فَهَزَمُونَا , فَإِذَا صَائِحٌ يَصِيحُ: يَا سَارِيَ , الْجَبَلَ , فَأَسْنَدْنَا ظُهُورَنَا إِلَى الْجَبَلِ فَهَزَمَهُمُ اللهُ , فَقُلْنَا لِعُمَرَ: كُنْتَ تَصِيحُ بِذَلِكَ.
قَالَ ابْنُ عَجْلَانَ وَحَدَّثَنَا إِيَاسُ بْنُ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ بِذَلِكَ , وَاللهُ تَعَالَى أَعْلَمُ
Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-2658.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48056-யஹ்யா பின் அய்யூப் பற்றி, சில அறிஞர்கள் பாராட்டினாலும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
- இவர் மனன சக்தியில் மோசமானவர்” என இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
விமர்சித்துள்ளார். ‘‘இவரது ஹதீஸ்கள் எழுதப்படும், ஆனால் ஆதாரமாகக் கொள்ளப்படாது” என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். ‘‘இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்பட்டவர்” என இப்னு ஸஃது கூறியுள்ளார். ‘‘இவருடைய சில ஹதீஸ்களில் குளறுபடிகள் உள்ளன” என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் விமர்சித்துள்ளார். - ‘‘இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார்” என இஸ்மாயீலி கூறுகின்றார். ‘‘இவர் உண்மையாளர் இன்னும் தவறிழைக்கக்கூடியவர்” என ஸாஜி கூறுகின்றார். ‘‘யஹ்யா இப்னு அய்யூப் அதிகம் தவறிழைக்கக் கூடியவர்” என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறியுள்ளார். ‘‘இவர் தனது மனனத்திலிருந்து அறிவிக்கும் போது தவறிழைக்கக்கூடியவர், தன்னுடைய புத்தகத்திலிருந்து அறிவித்தால் பிரச்சினையில்லை” என அல்ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அபூ அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறியுள்ளார். இமாம் உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இவரை பலவீனமானவர்கள் பட்டியலில் கொண்டுவந்துள்ளார்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம் 11, பக்கம் 163
- ‘‘இவருடைய நிலையை நான் அறிந்துள்ளேன். இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார்” என இப்னுல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். ‘‘இவர் உறுதியானவர் இல்லை” என இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
விமர்சித்துள்ளார்.
(மீஸானுல் இஃதிதால், பாகம் 4, பக்கம் 362)
- ‘‘இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர்” என இமாம் அபூ சுர்ஆ விமர்சித்துள்ளார்.
(நூல்: ஸுஆலாத்துல் பர்தயீ, பக்கம் 433)
- மேலும் இதில் வரும் ராவீ-41097-முஹம்மத் பின் அஜ்லான், நாஃபிஉ வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் குளறுபடியானவை” என உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
கூறியுள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம் 9, பக்கம் 304, கூடுதல் தகவல் பார்க்க: இப்னு அஜ்லான்)
கூடுதல் தகவல்: قصة يا ساريةُ الجبل ليست ثابتة .
சமீப விமர்சனங்கள்