நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் 22 ஆம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள். ரைஹானா என்ற பெயருடைய அவர்களின் மகளிடம் இருக்கும் போது அவர்களுக்கு நோய் ஆரம்பமானது. (இவர் யூத சமுதாயத்தை சேர்ந்த கைதி ஆவார்). முதலில் சனிக்கிழமை நோயுற்றார்கள். ஹிஜ்ரி 10 ம் வருடம், ரபீஉல் அவ்வல் 10 ம் நாள் திங்கள்கிழமை மரணித்தார்கள்.
அறிவிப்பவர்: சுலைமான் பின் தர்கான் அத்தைமீ
(dalail-annubuwwah-bayhaqi-3181: 3181)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ كَامِلٍ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْبَزَّازُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرِضَ لِاثْنَتَيْنِ وَعِشْرِينَ لَيْلَةً مِنْ صَفَرٍ، وَبَدَأَهُ وَجَعُهُ عِنْدَ وَلِيدَةٍ لَهُ، يُقَالُ لَهَا رَيْحَانَةُ كَانَتْ مِنْ سَبْيِ الْيَهُودِ، وَكَانَ أَوَّلُ يَوْمٍ مَرِضَ فِيهِ يَوْمَ السَّبْتِ، وَكَانَتْ وَفَاتُهُ الْيَوْمَ الْعَاشِرَ، يَوْمَ الْإِثْنَيْنِ لِلَيْلَتَيْنِ خَلَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ، لِتَمَامِ عَشْرِ سِنِينَ مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ
Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-3181.
إسناد ضعيف لأن به موضع إرسال ، وباقي رجاله ثقات عدا الحسن بن علي الأفريقي وهو مجهول الحال (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-12208-ஹஸன் பின் அலீ அல்அஃப்ரீகீ என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
- மேலும் இதில் வரும் ராவீ-18361-ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ அவர்கள் நபித்தோழர் அல்ல. (நான்காம் நிலையில் உள்ள தாபிஈ ஆவார்-அதாவது இந்த வகையினர் சில நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளனர். என்றாலும் இவர்கள் அதிகமாக மூத்த தாபிஈன்களிடமிருந்தே அதிகமாக ஹதீஸ்களை அறிவிப்பார்கள்) .
- நபி (ஸல்) அவர்களுக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு ஸஃத்-2247 .
சமீப விமர்சனங்கள்