மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல் பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு தகுதியானதாகும்.
ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது காலுறைகளின் மேல் பாகத்தின் மீதே மஸஹ் செய்யக் கண்டுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்து கைர் (ரஹ்)
(daraqutni-783: 783)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا , ثنا أَبُو كُرَيْبٍ , ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ , عَنِ الْأَعْمَشِ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَبْدِ خَيْرٍ , قَالَ:
قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ , «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهَرِخُفَّيْهِ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-783.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-680.
إسناد ضعيف فيه محمد بن القاسم المحاربي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் காஸிம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அபூதாவூத்-162 .
சமீப விமர்சனங்கள்