யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய போது தன்னுடன் தொழுகையில் கலந்து கொள்ளாத இருவரை கூட்டத்தின் இறுதியில் (அமர்ந்து) இருப்பதைக் கண்டார்கள். அவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.
அவ்விருவரின் தோல் புஜங்களும் (அச்சத்தால்) நடுங்கிய நிலையில் அவ்விருவரும் அழைத்து வரப்பட்டனர். நீங்கள் ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொழுதுவிட்டு ஜமாஅத் நடக்கும் பள்ளிக்கு வந்தால் மக்களுடன் சேர்ந்து தொழ வேண்டும். இத்தொழுகை உங்களுக்கு உபரியானதாகி விடும் என்றார்கள்…
(ஸுனன் தாரிமீ: 1407)حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ السُّوَائِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ،
أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، قَالَ: فَإِذَا رَجُلَانِ حِينَ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدَانِ فِي نَاحِيَةٍ لَمْ يُصَلِّيَا. قَالَ: فَدَعَا بِهِمَا، فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا. قَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا؟» قَالَا: صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَدْرَكْتُمَا الْإِمَامَ، فَصَلِّيَا فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ» قَالَ: فَقَامَ النَّاسُ يَأْخُذُونَ بِيَدِهِ يَمْسَحُونَ بِهَا وُجُوهَهُمْ. قَالَ: فَأَخَذْتُ بِيَدِهِ فَمَسَحْتُ بِهَا وَجْهِي، فَإِذَا هِيَ أَبْرَدُ مِنَ الثَّلْجِ، وَأَطْيَبُ رِيحًا مِنَ الْمِسْكِ
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1407.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1336.
சமீப விமர்சனங்கள்