தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1623

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்’ என்று எனக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1623)

أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رضي الله عنه قَالَ:

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْتِرْ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئ ْ إِيمَاءً»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-1536.
Darimi-Shamila-1623.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1439.




إسناده حسن رجاله ثقات عدا محمد بن يحيى الوراق وهو صدوق حسن الحديث ، وسفيان بن الحسين الواسطي وهو صدوق يخطئ

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஃயான் பின் ஹுஸைன், நம்பகமானவர் என்றாலும், முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரீயிடமிருந்து அறிவிக்கும் செய்தி பலவீனமானது என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.