கபருல் ஆஹாத் (தனிநபர் செய்திகள்)
முதவாதிராக அமையாத ஹதீஸ்களுக்கு கபருல் ஆஹாத் என்று பெயர். இது மூன்று வகையாகப் பிரிகிறது.
1. ஃகரீப்.
2. அஸீஸ்.
3. மஷ்ஹூர்.
இவற்றின் விளக்கம், வரைப்படம், உதாரணம் போன்றவற்றை இப்போது பார்ப்போம்…
1 . ஃகரீப்
அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.
உதாரணம்:
“பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்தவுடன் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
1804
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)” மட்டும் தனித்து அறிவிக்கின்றார்கள்.
அவர்களிடமிருந்து “அபூஸாலிஹ்” என்ற தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கிறார்.
அவரிடமிருந்து “சுமைஇ” என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.
அவரிடமிருந்து “மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.பின் அனஸ்” என்ற தபஉத் தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.
இவ்வாறு, அனைத்து நிலையிலும் ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் ஹதீஸ் கலையில் இது “கரீப்” என்று குறிப்பிடப்படப்படுகிறது.
2 . அஸீஸ்
அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையில் இருவர் மட்டுமே அறிவிக்கும் ஹதீஸாகும். இதில் ஏதேனும் ஒரு தலைமுறையில் மூவர் இடம் பெற்றாலும் அல்லது அனைத்து தலைமுறையிலும் இருவர் மட்டுமே இடம்பெற்றாலும் அது அஸீஸ் என்றே சொல்லப்படும்.
உதாரணம்:
“உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி).
நூல்கள்: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
15, முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
179.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி), அனஸ் (ரலி)” ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து “கதாதா மற்றும் அப்துல் அஜீஸ் பின் சுஹைப்” என்ற இரண்டு தாபியீன்கள் அறிவிக்கின்றனர்.
கதாதாவிடமிருந்து “ஷுஃபா மற்றும் சயீத்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்கள் அறிவிக்கின்றார்கள்.
அப்துல் அஜீஸ் பின் சுஹைபிடமிருந்து “இஸ்மாயில் பின் உலையா மற்றும் அப்துல் வாரிஸ்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்களும் அறிவிக்கின்றனர்.
இவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர்.
இந்த ஹதீஸில் சில தலைமுறையில் இரண்டு நபர்கள் இடம்பெற்றுள்ளதால் இது ஹதீஸ் கலையில் அஸீஸ் என்று குறிப்பிடப்படும்.
3 . மஷ்ஹூர்
மஷ்ஹூர் என்பது அனைத்து தலைமுறைகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். எந்த ஒரு தலைமுறையிலும் இருவருக்குக் குறைவாக இடம்பெறக் கூடாது.
உதாரணம்:
“நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேடியாக பறித்துவிட மாட்டான். ஆயினும், அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் போது அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் முலம்) தாமும் வழிகெட்டு(ப் பிறரையும்) வழிகெடுப்பார்கள்”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
100
இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டுக்கும் அதிகமான நபர்கள் (மூவர், நால்வர்) இடம் பெற்றுள்ளனர். எனவே இது மஷ்ஹூர் எனப்படும்.
பிற்சேர்க்கை.
அஸீஸ் செய்தி பற்றிய விளக்கம்:
دروس في شرح البيقونية – سعد الحميد (ص9 بترقيم الشاملة آليا):
الحديث العزيز
12 – عزيز مروي اثنين أو ثلاثه … مشهور مروي فوقما ثلاثه
العزيز: هو الحديث الذي يرويه اثنان، ولو في طبقة من طبقات السند، بشرط: أن لا يقل في أي طبقة من الطبقات عن اثنين، ويمكن أن يزيد.
وليس المقصود هو أن يرويه اثنان عن اثنين عن اثنين إلى منتهى السند، فإن هذا كما قال ابن حبان: ” لا يوجد حديث بمثل هذه الصفة “
وسمي العزيزُ عزيزاً لأحد أمرين:
1 – إما لقلته وندرته، وهذا ليس بصحيح، بل هو كثير.
2 – وإما لكونه عزَّ، أي: تقوى وتأيد، بمجيئه من طريق أخرى، كما قال تعالى: ” فعززنا بثالث ” أي: أيَّدنا الاثنين بالثالث.
قوله: ” عزيز مروي اثنين أو ثلاثه “، لعله يقصد بذلك أنه إذا وُجد في بعض الطبقات اثنان، فلا بأس أن يوجد في طبقة أخرى أكثر من اثنين، كثلاثة مثلا، وهذا كما تقدم.
أما إذا كان يقصد أن رواية الثلاثة، يُسمى حديثهم عزيزا، فقد قال الشيخ سعد الحميد: ” لا أعلم أحدا من أهل الحديث قال به “.
والظاهر أنه يقصد المعنى الثاني، لأنه قال بعدها:
” مشهور مروي فوقما ثلاثه “
…
شرح المنظومة البيقونية ليوسف جودة (ص92):
الحديث العَزِيز: ما يَرْوِيهِ اثْنَيْنِ أَوْ ثَلاثَة وَلَو مِن طَبقَةٍ وَاحِدَةٍ مِن طَبَقَاتِهِ
…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அறிஞர் பீஜே அவர்கள் சமீபத்தில் நீங்களும் ஆலிம் ஆகலாம் என்ற தொடரில் ஹதீஸ் கலை சம்பந்தமாக பேசும் போது அஜீஸ் என்ற வகைக்கு ஒரு உதாரணம் கூட ஹதீஸ்களில் கிடையாது என கூறியுள்ளார்.இது குறித்து தெளிவாக பதிலளிக்கவும்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.
அஸீஸ் வகை ஹதீஸ் என்றால் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் நபித்தோழர்கள், தாபிஈன்கள், இவர்களை அடுத்து வந்தவர்கள்…நூலாசிரியர் வரை உள்ள அறிவிப்பாளர்களில் ஒவ்வொரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்களிலும்-அதாவது தலைமுறையினர்களிலும் ஏதேனும் சில காலகட்டத்தைச் சேர்ந்தவர்களில்-ஆரம்பத்தில் அல்லது இடையில் அல்லது கடைசியில் இருவருக்கு குறையாமல் (சிலரின் கருத்துப்படி மூவர்) ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியை அஸீஸ் வகை என்று கூறுவர். (சில காலகட்டத்தில் உள்ளவர்கள் 2 பேரை விட அதிகமாகவும் அறிவித்திருக்கலாம்)
மாலிக் இமாம் அவர்கள், நாபிஃ —> இப்னு உமர் (ரலி) ; அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு நபித்தோழர் வருவதால் இதை அஸீஸ் என்று கூறக்கூடாது. இது ஒரே வகை அறிவிப்பாளர்தொடராகும்.
புகாரியின் முதல் செய்தியை ஃகரீப் என்று கூறுவோம். இதை யஹ்யா பின் ஸயீத் அவர்களிடமிருந்து பலர் அறிவித்தாலும் ஃகரீப் என்று கூறுவோம். காரணம் அது உமர் (ரலி) அவர்கள் வழியாக மட்டும் வந்துள்ளது.
அஸீஸ் என்பதற்கு நாம் சொன்னது போன்ற வரைவிலக்கணத்தின்படி உள்ள செய்திகளை அஸீஸ் என்று கூறலாம்.
அனஸ் (ரலி) வழியாக வரும் புகாரீ-15, முஸ்லிம்-70, ஆம் செய்தியையும், அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் புகாரீ-14 ஆம் செய்தியையும் அஸீஸ் வகைக்கு உதாரணமாக ஸகாவீ இமாம் கூறியுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் முஃகீஸ்-4/9)
இந்தச் செய்தியைத் தான் மேலே அஸீஸ் என்பதற்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. அஸீஸ் என்றால் நபித்தோழர் முதல் நூலாசிரியர் வரை உள்ளவர்களில் ஒவ்வொரு காலத்தைச் சேர்ந்தவர்களிலும் இருவர் மட்டுமே அறிவிப்பது என்ற வரைவிலக்கணத்தின்படி இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அதிகம் உள்ளது என்பதால் பி.ஜே அவர்கள் அப்படி கூறியிருக்கலாம்.
இப்னு ஹிப்பான் அவர்கள், அஸீஸ் என்ற வகை இல்லை என்று கூறியிருப்பதும் இதனடிப்படையில்தான்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் அனஸ் (ரலி) , அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகளே சரியாக உள்ளன. இந்தச் செய்தியில் அஸீஸ் வகைக்கான இலக்கணம் உள்ளது. இதே கருத்தில் வரும் மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் சிலவற்றில் விமர்சனம் உள்ளது. சிலவற்றில் கூடுதல், குறைவு வார்த்தைகள் உள்ளன.
இந்த விளக்கம் தெளிவாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ். புரியாவிட்டால் மீண்டும் கேட்கவும்.
அஜீஸ் குறித்து அனஸ் ரளி அவரிடமிருந்து இருவர் கதாதா, அப்துல் அஜீஸ் பிறகு கதாதா-ஷுஅபா, ஸயீத்
அப்துல் அஜீஸ் -இஸ்மாயில், அப்துல் வாரிஸ் ஆனால் ஷுஅபாவிடமிருந்து இருவர் அறிவிக்கவில்லை என்பதாக அறிஞர் பீஜே கூறுகிறார்.
எனவே அஜீஸ் வகைக்கு ஹதீஸ்களே கிடையாது என்கிறார்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸீஸ் என்பதற்கு கூறப்படும் தஃரீஃப் என்ன என்பதைக் கவனிக்கவும்.
ஒரு செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் சில தலைமுறையினர்கள் 2 அல்லது 3 பேர் உட்பட்டவர்கள் அறிவிப்பது. இதில் சில தலைமுறையினர் 3 விட அதிகமாகவும் இருப்பார்கள். இது பிரச்சனையில்லை.
ஆனால் ஸனதின் ஆரம்பம் 2 நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளது. இவ்வாறே அதற்கடுத்த தலைமுறையினரிடமிருந்து 2 பேர் வழியாக வந்துள்ளது. இதனடிப்படையில் தான் இதை அஸீஸ் என்று கூறியுள்ளனர்.
அஸீஸ் என்பதின் தஃரீஃப் பற்றி பிற்சேர்க்கையில் கூறப்பட்ட சிகப்பு நிற அரப் வாசகத்தைக் கவனிக்கவும்.
இந்த விளக்கத்தை பார்க்கவும்:
(ஆரம்பத்தில் அல்லது இடையில் அல்லது கடைசியில் இருவருக்கு குறையாமல் (சிலரின் கருத்துப்படி மூவர்) ஒரு செய்தியை அறிவித்தால்…
இப்னு ஹஜர் அவர்கள் தனது நுக்பாவின் ஷரஹில் கூறியுள்ள தகவல்:
نزهة النظر في توضيح نخبة الفكر (ص44 ت عتر):
والمرادُ بقولنا: “أنْ يَرِدَ باثنين”: ألَّا يردَ بأقلَّ منهما، فإنْ ورد بأكثرَ في بعض المواضع من السند الواحد لا يضرّ، إذ الأقلُّ في هذا يقضي على الأكثر
…
نزهة النظر في توضيح نخبة الفكر (ص49 ت عتر):
وادّعى ابن حِبّان نقيضَ دعواه، فقال: إنّ روايةَ اثنين عن اثنين إلى أن ينتهي لا توجد أصلًا.
قلت: إنْ أراد أنّ روايةَ اثنين فقط عن اثنين فقط لا توجد أصلًا فيمكن
أن يُسَلَّمَ، وأمّا صورةُ العزيزِ التي حررناها فموجودةٌ بألّا يرويَه أقلُّ من اثنين عن أقلَّ من اثنين
இதைப் பற்றிய தகவல் இன்னும் தெளிவாக தெரிய வேண்டும் என்றால் போன் செய்யவும். 8072073328 .