தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1131

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

“வித்ரு தொழுகை ஐந்து ரக்அத் ஆகும். ஐந்தை, நீ தொழ முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ர் தொழு ; மூன்றை, நீ தொழ முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ர் தொழு ; ஒரு ரக்அத், நீ தொழ முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

(ஹாகிம்: 1131)

فَأَخْبَرَنَاهُ أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْمَحْبُوبِيُّ بِمَرْوَ، ثنا سَعِيدُ بْنُ مَسْعُودٍ، ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْوِتْرُ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ» فَأَوْمِ إِيمَاءً


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1131.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1067.




إسناده حسن رجاله ثقات عدا محمد بن يحيى الوراق وهو صدوق حسن الحديث ، وسفيان بن الحسين الواسطي وهو صدوق يخطئ

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஃயான் பின் ஹுஸைன், நம்பகமானவர் என்றாலும், முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரீயிடமிருந்து அறிவிக்கும் செய்தி பலவீனமானது என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.