அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.
முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியின் முதல் பகுதியை புகாரி, முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். கூடுதலான இந்த (இரண்டாவது) பகுதியை அவர்கள் பதிவு செய்யவில்லை. என்றாலும் இது முஸ்லிம் இமாம் அவர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான செய்தியாகும்.
இதனுடன் இருவரும் பதிவு செய்யாத, கூடுதலான, முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்திகளும் உள்ளன.
(ஹாகிம்: 22)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، وَأَبُو بَكْرِ بْنُ سَلْمَانَ الْفَقِيهَانِ قَالَا: ثنا عُبَيْدُ بْنُ شَرِيكٍ، ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، ثنا اللَّيْثُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»
قَدِ اتَّفَقَا عَلَى إِخْرَاجِ طَرَفِ حَدِيثِ «الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ» وَلَمْ يُخَرِّجَا هَذِهِ الزِّيَادَةَ وَهِيَ صَحِيحَةٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ، وَفِي هَذَا الْحَدِيثِ زِيَادَةٌ أُخْرَى عَلَى شَرْطِهِ مِمَّا لَمْ يُخَرِّجَاهَا
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-22.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-21.
சமீப விமர்சனங்கள்