தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-518

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(ஹாகிம்: 518)

حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ نُعَيْمٍ، وَمُحَمَّدُ بْنُ شَاذَانَ، قَالَا: ثنا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنْبَأَ الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثنا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، ثنا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَخْزُومِيُّ، ثنا يَعْقُوبُ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»

رَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي فُدَيْكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ مُوسَى الْمَخْزُومِيِّ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-518.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-471.




  • இதன் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வரும் யஃகூப் பின் ஸலமா, அவரின் தந்தை ஸலமா அல்லைஸீ போன்றோர் ஆதாரம்கொள்ளத்தக்கவர்கள் அல்ல என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் விமர்சித்துள்ளார். (நூல்: அல்காஷிஃப் 2 / 517 , 4 / 535 )

மேலும் பார்க்க : அபூதாவூத்-101 .

குறிப்பு: இதன் அறிவிப்பாளர்தொடரில் யஃகூப் பின் அபீ ஸலமா என்றிருப்பது தவறாகும். யஃகூப் பின் ஸலமா என்பதே சரி. யஃகூப் பின் அபீ ஸலமா என்று வைத்தாலும் அவரின் தந்தை தீனார் அல்லைஸீ ஆவார். அவர் அறியப்படாதவர் என்பதால் இதுவும் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.