நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், “என்ன?” என்று கேட்டான். இது “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரும் இடம் தானே?” என்று கூறியது.
அதற்கு அல்லாஹ் “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான்.
(பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“நீங்கள் விரும்பினால் “நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?” (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(ஹாகிம்: 7286)أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ أَحْمَدُ بْنُ عُثْمَانَ الْبَزَّازُ، بِبَغْدَادَ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرِّدٍ، حَدَّثَنِي عَمِّي أَبُو الْحُبَابِ سَعِيدُ بْنُ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمَّا فَرَغَ مِنَ الْخَلْقِ قَامَتِ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ فَقَالَ: مَهْ، فَقَالَتْ: هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيعَةِ. فَقَالَ: أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ ” اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} [محمد: 22] إِلَى قَوْلِهِ: {أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ} [النساء: 82] إلخ
«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7286.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7351.
சமீப விமர்சனங்கள்