தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை. நபியும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “என்றாலும் (முபஷ்ஷராத்) நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! (முபஷ்ஷராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(ஹாகிம்: 8178)حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، ثَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ» قَالَ: فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ، فَقَالَ: «لَكِنِ الْمُبَشِّرَاتُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا الْمُبَشِّرَاتُ؟ قَالَ: «رُؤْيَا الْمَرْءِ الْمُسْلِمُ هِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ»
هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8178.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8248.
- இதன் நூலாசிரியர் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் அப்துல் வாஹித் பின் ஸியாத் அவர்களிடம் நேரடியாக கேட்கவில்லை. இடையில் பலர் விடப்பட்டுள்ளனர் என்பதால் இது முஅல்லக் என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-2272 .
சமீப விமர்சனங்கள்