அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர் தனது தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் “இவரை யாருக்குத் தெரியும்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “நான் (அறிவேன்)” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன்.
ஏனென்றால் “ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவரிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்” என்ற நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் நுஃபைர் (ரலி)
(இப்னு ஹிப்பான்: 1734)ذِكْرُ تَسَّاقَطِ الْخَطَايَا عَنِ الْمُصَلِّي بِرُكُوعِهِ وَسُجُودِهِ
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ صَالِحٍ، يُحَدِّثُ عَنِ الْعَلَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ زَيْدِ بْنِ أَرْطَاةَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ،
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَأَى فَتًى وَهُوَ يُصَلِّي قَدْ أَطَالَ صَلَاتَهُ، وَأَطْنَبَ فِيهَا، فَقَالَ: مَنْ يُعْرَفُ هَذَا؟ فَقَالَ رَجُلٌ: أَنَا، فَقَالَ عَبْدُ اللَّهِ: لَوْ كُنْتُ أَعْرِفُهُ لَأَمَرْتُهُ أَنْ يُطِيلَ الرُّكُوعَ وَالسُّجُودَ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْعَبْدَ إِذَا قَامَ يُصَلِّي، أُتِيَ بِذُنُوبِهِ، فَوَضَعَتْ عَلَى رَأْسِهِ، أَوْ عَاتِقِهِ، فَكُلَّمَا رَكَعَ أَوْ سَجَدَ، تَسَاقَطَتْ عَنْهُ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-1734.
Ibn-Hibban-Shamila-1734.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-1769.
…
இந்தச் செய்தி வேறு சில சரியான அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது என்பதால் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.
இந்த ஹதீஸின் தரம் ?
அஸ்ஸலாமு அலைக்கும்.
சரியான ஹதீஸ், இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் மற்ற செய்திகள் பிறகு பதிவு செய்யப்படும்.