நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றியதும் தம்முடைய முகத்தை ஸஹாபாக்களை முன்னோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உங்கள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்களில் ஒருவர் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். (என்றாலும்) “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளுங்கள்“ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
…
(இப்னு ஹிப்பான்: 1844)أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ أَبِي زُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ، فَقَالَ: «أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ خَلْفَ الْإِمَامِ، وَالْإِمَامُ يَقْرَأُ؟ » فَسَكَتُوا، فَقَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ قَائِلٌ، أَوْ قَائِلُونَ: إِنَّا لَنَفْعَلُ، قَالَ: «فَلَا تَفْعَلُوا، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ».
قَوْلُهُ «فَلَا تَفْعَلُوا» لَفْظَةُ زَجْرٍ مُرَادُهَا ابْتِدَاءُ أَمْرٍ مُسْتَأْنَفٍ، إِذِ الْعَرَبَ تَفْعَلُ ذَلِكَ فِي لُغَتِهَا كَثِيرًا
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-1844.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-1881.
- (இதன் அறிவிப்பாளர்தொடர் வெளிப்படையில் சரியாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும்) இதில் உபைதுல்லாஹ் பின் அம்ர் தவறு செய்துவிட்டார். அபூகிலாபா அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இந்த செய்தியைக் கேட்கவில்லை. இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார் என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2805 .
இது பலவீனமான ஹதீஸ்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.