தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-1852

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றியதும் தம்முடைய முகத்தை ஸஹாபாக்களை முன்னோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உங்கள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்களில் ஒருவர் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். (என்றாலும்) “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளுங்கள்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

இப்னு ஹிப்பான் (அபூஹாதிம்) கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூகிலாபா அவர்கள், முஹம்மது பின் அபூஆயிஷாவிடமிருந்தும் கேட்டுள்ளார். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் கேட்டுள்ளார். இரண்டு வழிகளில் வரும் செய்தியும் மஹ்ஃபூல் ஆகும்.

(இப்னு ஹிப்பான்: 1852)

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا فَرَحُ بْنُ رَوَاحَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ، فَقَالَ: «أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ خَلْفَ الْإِمَامِ، وَالْإِمَامُ يَقْرَأُ؟ »، فَسَكَتُوا، قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ قَائِلٌ، أَوْ قَائِلُونَ: إِنَّا لَنَفْعَلُ، قَالَ: «فَلَا تَفْعَلُوا، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ».

قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو قِلَابَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ بَعْضِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعَهُ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ، فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-1852.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-1889.




  • (இதன் அறிவிப்பாளர்தொடர் வெளிப்படையில் சரியாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும்) இதில் உபைதுல்லாஹ் பின் அம்ர் தவறு செய்துவிட்டார். அபூகிலாபா அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இந்த செய்தியைக் கேட்கவில்லை. இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார் என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2805 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.