தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3002

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 3002)

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اقْرَءُوا عَلَى مَوْتَاكُمْ يس»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3002.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3078.




  • இதில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார். அபூ உஸ்மான், அவரின் தந்தை இருவரும் யார் என அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-20300 .

3 comments on Ibn-Hibban-3002

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ,
    நீங்கள் குறிப்பிடும் அபூ உஸ்மான் என்பவரை https://hadith.islam-db.com/narrators/3229/%D8%A3%D8%A8%D9%88-%D8%B9%D8%AB%D9%85%D8%A7%D9%86 என்ற தளத்தில் الرتبة : مقبول
    தரவரிசை: ஏற்கத்தக்கது என போட்டுள்ளது. விளக்கம் தேவை.
    ஜசாகல்லாஹ்

    1. வ அலைக்கும் ஸலாம்.
      ابن حجر العسقلاني : مقبول
      الذهبي : لا يعرف هو ولا أبوه
      علي بن المديني : لم يرو عنه غير سليمان التيمي، وهو إسناد مجهول
      مصنفوا تحرير تقريب التهذيب : مجهول، فقد تفرد بالرواية عنه سليمان التيمي
      நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் இந்த விவரங்களும் உள்ளது என்பதைக் கவனிக்கவும்.
      இப்னு ஹஜர் மக்பூல் என்ற தரத்தில் கூறியிருந்தாலும் இப்னுல் மதீனீ, தஹபீ ஆகியோர் அறியப்படாதவர் என்றே கூறியுள்ளனர். இவ்வாறே இப்னு ஹஜர் அவர்களின் தக்ரீபை ஆய்வு செய்தவர்களும் அறியப்படாதவர் என்றே கூறியுள்ளனர்.
      மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரை முள்தரிப் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். காரணம் இது அபூஉஸ்மான் —> அவரின் தந்தை —> மஃகில் பின் யஸார் (ரலி) என்றும் வந்துள்ளது. அபூஉஸ்மான் —> மஃகில் பின் யஸார் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
      இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்று கூறினால் அதன் கருத்து அவரைப் போன்று வேறுயாரும் அறிவித்தால் அதாவது முதாபஅஹ் இருந்தால் மக்பூல் ஆகும். முதாபஅஹ் இல்லாவிட்டால் பலவீனமாகும் என்பதாகும்.

      1. நன்றி சகோதரரே, சந்தேகத்திற்கு விளக்கம் அளித்தமைக்கு, ஜஸாகல்லாஹ்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.