தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3074

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தார்கள்.

அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃபஅயித்ஹு மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வஅதாபின்னாரி அன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி அல்லாஹும்ம ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்.

பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.

அறிவிப்பவர் : வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

(இப்னு ஹிப்பான்: 3074)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ، بِصَيدَا، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مَرْوَانَ بْنِ جُنَاحٍ، عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،

أَنَّهُ صَلَّى عَلَى رَجُلٍ فَقَالَ: «اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ، وَحَبْلِ جِوَارِكَ فَأَعِذْهُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ النَّارِ، أَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3074.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3152.




إسناده حسن رجاله ثقات عدا مروان بن جناح الأموي وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்வான் பின் ஜனாஹ் சுமாரானவர் என்பதால் இது ஹஸன் தரம் என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இவரைப் பற்றி அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் ஹதீஸ்களை எழுதிக்கொள்ளலாம்.ஆனால் ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்கள். நினைவாற்றலில் சரியில்லாமல் சிறிது தவறாக அறிவிப்பவர்களுக்கு தான் அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்படி கூறுவார். மேலும் அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடும்போக்கு கொண்டவர். எனவே மற்ற அறிஞர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டே இவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் தகவல் பார்க்க :  بيان قول الإمام أبي حاتم الرازي .

சரியான ஹதீஸ் பார்க்க : இப்னு மாஜா-1499 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.