தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1384

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

நாட்டம் நிறைவேற தொழும் தொழுகை.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தபோது, “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்.

பின்பு அவர் “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வ அஸாயிம மஃபிரதிக, வல்கனீமத மின் குல்லி பிர்ரிவ், வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்ம். அஸ்அலுக லா ததஃலீ தம்பன் இல்லா கஃபர்தஹு, வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு, வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா லீ, என்று கூறட்டும். பின்பு அவர் விரும்பிய இம்மை, மறுமை தேவைகளை அல்லாஹ்விடம் கேட்கட்டும். அது (அவருக்கு  கிடைக்க வழிகள்) ஏற்படுத்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)

(இப்னுமாஜா: 1384)

بَابُ مَا جَاءَ فِي صَلَاةِ الْحَاجَةِ

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الْعَبَّادَانِيُّ، عَنْ فَائِدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى الْأَسْلَمِيِّ، قَالَ:

خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى اللَّهِ، أَوْ إِلَى أَحَدٍ مِنْ خَلْقِهِ، فَلْيَتَوَضَّأْ وَلْيُصَلِّ رَكْعَتَيْنِ، ثُمَّ لِيَقُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ، أَسْأَلُكَ أَلَّا تَدَعَ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ، وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ، وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا لِي، ثُمَّ يَسْأَلُ اللَّهَ مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ مَا شَاءَ، فَإِنَّهُ يُقَدَّرُ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1384.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1374.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஃபாயித் பின் அப்துர்ரஹ்மான் அபுல்வர்கா என்பவர் பற்றி இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ , போன்றோர் இவர் (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால்) கைவிடப்பட்டவர் என்றும், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், இவர் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) வழியாக பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/380)

மேலும் பார்க்க : திர்மிதீ-479 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.