தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1565

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அடக்கத்தலத்தில் மண் அள்ளிப் போடுவது பற்றி வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 1565)

بَابُ مَا جَاءَ فِي حَثْوِ التُّرَابِ فِي الْقَبْرِ

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُلْثُومٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «صَلَّى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1554.
Ibn-Majah-Shamila-1565.
Ibn-Majah-Alamiah-1554.
Ibn-Majah-JawamiulKalim-1554.




ஆய்வின் சுருக்கம்: நபி (ஸல்) அவர்கள், மூன்று பிடி மண் எடுத்து கப்ரில் போட்டார்கள் என்பதற்கு பலமான சான்று இல்லை. சில நபித்தோழர்கள் இவ்வாறு செய்ததாக சில செய்திகள் உள்ளன.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம் (முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா)

2 . அப்பாஸ் பின் வலீத்

3 . யஹ்யா பின் ஸாலிஹ்

4 . ஸலமா பின் குல்ஸூம்

5 . அவ்ஸாஈ

6 . யஹ்யா பின் அபூகஸீர்

7 . அபூஸலமா

8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள் வழியாக, நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தியது; ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறியது; ஜனாஸா தொழுகையில் பிரார்த்தனை செய்தது; கப்ரில் மூன்று பிடி மண் அள்ளிப்போட்டது போன்ற தகவல்களை அறிவிப்பாளர்கள் பலசெய்திகளாக அறிவித்துள்ளனர்.


கப்ரில் மூன்று பிடி மண் அள்ளிப் போடுவது பற்றி வரும் இந்த செய்தியை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் பாதில்-தவறானது என்று விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-483 , 1026)

இதற்கான காரணம் இந்தச் செய்தியை அபூஸலமா (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கும் முக்கியமான அறிவிப்பாளர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களை கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர் என்பதாகும். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், அவ்ஸாஈ, யஹ்யா பின் அபூகஸீர் ஆகியோர் தத்லீஸ் செய்திருப்பதால் இவ்வாறு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார் என்று வேறு ஒரு காரணத்தை தனது தல்கீஸில் கூறியிருந்தாலும் இந்தக் காரணம் மட்டும் இதற்கு போதுமானதல்ல. அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறும் காரணத்தை வைத்து இந்தச் செய்தியை விமர்சிக்க முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு இலலுல் ஹதீஸ்-1026 இல் வரும் தகவல் அடிப்படையில் முர்ஸல் என்ற காரணத்தின் அடிப்படையில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியிருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவ்ஸாஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸலமா பின் குல்ஸூம் அவர்களின் மேற்கண்ட செய்தி அபூஹாதிமுக்கு கிடைக்காமலிருக்கலாம் என்றும்; அபூஹாதிமின் விமர்சனம் தெளிவாக இல்லை என்றும் கூறி மேற்கண்ட செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். (ஆனால், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இலலுல் ஹதீஸ்-483 இல் ஸலமா பின் குல்ஸூம் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரை தனது மகன் இப்னு அபூஹாதிமிடம் அறிவித்து அதை தவறு என்றும் கூறியுள்ளார். எனவே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களுக்கு இந்த அறிவிப்பாளர்தொடர் கிடைக்காமலிருக்கலாம் என்ற அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களின் கருத்து தவறாகும்)

(நூல்கள்: தல்கீஸுல் ஹபீர்-772, 2/248, இர்வாஉல் ஃகலீல்-751, 752)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (9/ 321)
1794- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى الْجِنَازَةِ، قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا … الْحَدِيثَ.
فَقَالَ: اخْتُلِفَ عَلَى أَبِي سَلَمَةَ، فَرَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.

وَخَالَفَهُمْ إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، رَوَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَرَوَاهُ يحيى بن أبي كثير، عن أبي سلمة واختلف عنه؛
فرواه أيوب بن عتبة وسعيد بن يوسف وخالد بن يزيد الهدادي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَكَذَلِكَ قَالَ سُوَيْدٌ أَبُو حَاتِمٍ، عَنْ صَاحِبٍ لَهُ، عَنْ يَحْيَى.
وَرَوَاهُ الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ سلمة بْنُ كُلْثُومٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَادَ فِيهِ أَلْفَاظًا لَمْ يَأْتِ بِهَا غَيْرُهُ، وَهِيَ قَوْلُهُ أَنَّهُ أَتَى الْقَبْرَ فَحَثَى عَلَيْهِ ثَلَاثًا وَكَبَّرَ عَلَى الْجِنَازَةِ أَرْبَعًا.
وَوَافَقَهُ مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الصَّنْعَانِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَلَى الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ هذه الألفاظ.

وَخَالَفَهُمْ يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ الْحَرَّانِيُّ، وَعِيسَى بْنُ يُونُسَ، وَأَبُو الْحَسَنِ الْفَزَارِيُّ، وَالْمُعَافَى بْنُ عِمْرَانَ، وَالْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، وَبَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، وَالْوَلِيدُ بْنُ مَزْيَدٍ، رَوَوْهُ عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا.

وَكَذَلِكَ رَوَاهُ هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا، عَنْ أَبِي إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، وَعَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ مُرْسَلًا.
وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ وَلَمْ يَذْكُرْ حَدِيثَهُ، عَنْ أَبِي سَلَمَةَ.
وَرَوَاهُ عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سلمة، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ….

وَقَالَ شَيْبَانُ: عَنْ يَحْيَى، عَنِ الْمُهَاجَرِ بْنِ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقَالَ هَمَّامٌ: عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ.
وَالصَّحِيحُ عَنْ يَحْيَى لِقَوْلِ مَنْ قَالَ: عَنْ أَبِي إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، وَعَنْ أَبِي سَلَمَةَ مُرْسَلٌ.
وَرَوَاهُ إِسْرَائِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَلَمْ يَنْسِبْهُ أَكْثَرَ مِنْ هَذَا، ثُمَّ قَالَ عَنْ رَجُلٍ أَرَاهُ أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَرَوَاهُ ابْنُ أَبِي لَيْلَى، فَقَالَ: هُشَيْمٌ عَنْهُ، أَخْبَرَنِي رَجُلٌ مِنْ أهل مكة، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم.
وقال عقبة بن خالد: حدثنا ابْنُ أَبِي لَيْلَى، عَنِ ابْنِ يَحْيَى، أَوْ أَبِي يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، أن النبي صلى الله عليه وسلم كان يَقُولُ.
وَخَالَفَهُمْ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَلْقَمَةَ؛
فَرَوَاهُ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَّامٍ مَوْقُوفًا.

ஆனால் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்தக் கருத்தில் வரும் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிடுவதின் மூலம் இந்தச் செய்தியில் இருக்கும் குறைப்பாட்டை விளக்கியுள்ளார்.

இதைப் பற்றிய சுருக்கமான விளக்கம்:
1 . இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற நபித்தோழர் விடப்பட்டு வரும் முர்ஸலான செய்தியே உண்மையாகும்.

2 . இவ்வாறே யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரே உண்மையாகும் என்பதே தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் கருத்தாகும்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1794)

மேலும் அவ்ஸாஈ அவர்களின் பல முக்கிய மாணவர்கள், அறிவிக்காத கருத்தை ஸலமா பின் குல்ஸூம் தனித்து அறிவித்துள்ளார் என்பதை முக்கிய இல்லத்தாக-குறையாக சில ஹதீஸ்ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

கூடுதல் தகவல் பார்க்க: அபூதாவூத்-3201 .


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1565 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4673 ,


2 . ஆமிர் பின் ரபீஆ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1836 .

3 . அலீ (ரலி) அவர்களின் செயல், சொல்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11712 .

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் செயல்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11719 .

5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6479 .

6 . ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6478 .


7 . முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ஷாஃபிஈ-601.

مسند الشافعي – ترتيب سنجر (2/ 95):
601 – أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‌حَثَا ‌عَلَى ‌الْمَيِّتِ ‌ثَلاثَ ‌حَثَيَاتٍ ‌بِيَدَيْهِ جَمِيعًا

..


8 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொல்: (இது பொதுவாக அடக்கம் செய்த பின் மண்ணைப் போடுவது பற்றிக் கூறியது)

பார்க்க: முஸ்லிம்-192 .


9 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-3222.

الأوسط لابن المنذر (5/ 462 ت حنيف):
3222 – حدثنا إسماعيل، قال: ثنا أبو بكر، قال: ثنا يحيى بن سعيد، عن ثور، قال: ثنا عامر بن جشيب، وغيره، من أهل الشام عن أبي الدرداء، قال: «‌إن ‌من ‌تمام ‌أجر ‌الجنازة ‌أن ‌يحثو ‌في ‌القبر»


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3201 ,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்களும், மற்ற முழு விவரங்களும் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.