தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3377

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

மது அருந்துபவரின் தொழுகை ஏற்கப்படாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மதுவை அருந்துகிறாரோ அவருடைய நாற்பது நாட்கள் தொழுகை நிறைவேறாது. அவர் அதற்காக மன்னிப்பு கேட்டு திருந்துகிறார். திரும்ப அவர் மதுவை அருந்துகிறார். திரும்ப அல்லாஹ்வுடன் பாவ மன்னிப்பு கேட்கிறார். திரும்ப மூன்றாவது முறையாக மது அருந்துகிறார். திரும்ப பாவ மன்னிப்பு கேட்கிறார்.

மூன்று தடவைக்கு மேல் நான்காவது முறை மது அருந்தினால் அவருக்காக அல்லாஹ் அம்மனிதருக்கு மறுமையில் ரதஹத்தில் கபால் என்ற மதுவை கடமையாக்குகின்றான். உடனே, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ரதஹத்தில் கபால் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது நரகவாசிகள் சீழும், சலுமும் தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(இப்னுமாஜா: 3377)

بَابُ مَنْ شَرِبَ الْخَمْرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ الدِّيلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، فَشَرِبَ، فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ، تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، فَشَرِبَ، فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ، أَنْ يَسْقِيَهُ مِنْ رَدَغَةِ الْخَبَالِ، يَوْمَ الْقِيَامَةِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا رَدَغَةُ الْخَبَالِ؟ قَالَ: «عُصَارَةُ أَهْلِ النَّارِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3337.
Ibn-Majah-Shamila-3377.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3376.




மேலும் பார்க்க: நஸாயீ-5664 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.