தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-14332

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு திருமணம் நடத்திவைக்கும் போது அவரிடம், நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அந்த பெண்ணிடமும் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஹர் எதையும் நிர்ணயிக்காமலேயே அவ்விருவருக்கும் திருமணம் முடித்துவைத்தார்கள். அந்த மனிதரும் மஹர் தரவில்லை. அவர் ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர். ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர்களுக்கு கைபர் போரில் பங்குண்டு என்ற வகையில் அவருக்கு ஒரு பங்கு கிடைத்தது.

அவரின் மரணத்தருவாயில், தன் அருகில் இருந்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் மஹர் எதுவும் நிர்ணயிக்காமலேயே எனக்கு இந்த பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள். நானும் இதுவரை மஹர் எதுவும் தரவில்லை. இப்போது கைபர் போரில் எனக்கு கிடைத்த பங்கை அந்தப்பெண்ணுக்கு மஹராக தருகிறேன், நீங்களே இதற்கு சாட்சி என்று கூறினார். அந்தபெண் கைபரின் பங்கை அவரிடம் மஹராக வாங்கி, அதை விற்று ஒரு லட்சம் திர்ஹத்தை பெற்றார்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

எளிமையான (குறைந்த) மஹரே, சிறந்த (மஹர்) திருமணக்கொடையாகும்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 14332)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أنبأ أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الزَّاهِدُ الْأَصْبَهَانِيُّ , أنبأ أَبُو إِسْمَاعِيلَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ السُّلَمِيُّ، حَدَّثَنِي أَبُو الْأَصْبَغِ عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ، أنبأ مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ خَالِدِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلَانَةَ؟ ” قَالَ: نَعَمْ، وَقَالَ لِلْمَرْأَةِ: ” أَتَرْضَيْنَ أَنْ أُزَوِّجَكِ فُلَانًا؟ “، فَقَالَتْ: نَعَمْ , فَزَوَّجَ أَحَدَهُمَا صَاحِبَهُ، وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ يُعْطِهَا شَيْئًا , وَكَانَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ، وَكَانَ مَنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ، فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَنِي فُلَانَةَ , وَلَمْ أَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ أُعْطِهَا شَيْئًا، وَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي أَعْطَيْتُهَا صَدَاقَهَا سَهْمِي بِخَيْبَرَ , فَأَخَذَتْ سَهْمًا فَبَاعَتْهُ بِمِائَةِ أَلْفٍ قَالَ: وَقَالَ رَسُولُ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: ” خَيْرُ الصَّدَاقِ أَيْسَرُهُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-14332.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-13273.




மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4072 .

3 comments on Kubra-Bayhaqi-14332

  1. அஸ்ஸலாமு அலைக்கும் கீழ்காணும் ஹதீஸின் தரம் தேவை சகோதரரே,

    أَخْبَرَنَا نُصَيْرُ بْنُ الْفَرَجِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَائِدَةَ، قَالَ حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ جَهَّزَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاطِمَةَ فِي خَمِيلٍ وَقِرْبَةٍ وَوِسَادَةٍ حَشْوُهَا إِذْخِرٌ ‏.‏
    ஒருவர் தம் மகளுக்குத் திருமணச் சீர் கொடுத்தல்
    3331. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் மகளார்) ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு குஞ்சம் வைத்த ஒரு கம்பளிப் போர்வை, தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவை, இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட தோல் தலையணை ஆகியவற்றைத் திருமணச் சீர்ப்பொருள்களாகக் கொடுத்தனுப்பினார்கள்.’
    Sunan an-Nasa’i 3384

    1. அஸ்ஸலாமு அலைக்கும் , மன்னிக்கவும், நான் மேற்குறிப்பிட்ட ஹதீஸிற்கு தங்கள் தரப்பில் ரிப்லே ஏதும் செய்யவில்லை.

      1. வ அலைக்கும் ஸலாம். மன்னிக்கவும். தங்கள் கேள்வியை கவனிக்கவில்லை.
        இந்தச் செய்தி சரியானது. இது பற்றிய தகவல் இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும். பார்க்க: அஹ்மத்-643 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.