தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-17567

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது.

இந்தச் செய்தி ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் —> மக்ஹூல் —> அபூஅய்யூப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இது முன்கதிஃ ஆகும்.

(பைஹகீ-குப்ரா: 17567)

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو مُحَمَّدِ بْنُ أَبِي حَامِدٍ الْمُقْرِئُ , قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا إِبْرَاهِيمُ بْنُ سُلَيْمَانَ الْبُرُلُّسِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ، ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أَبِي مَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ وَمَكْرُمَةٌ لِلنِّسَاءِ

الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَا يُحْتَجُّ بِهِ , وَقِيلَ: عَنْهُ , عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي أَيُّوبَ , وَهُوَ مُنْقَطِعٌ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-17567.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-16144.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர்; தத்லீஸ் செய்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/356)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-20719 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.