தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-1830

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்களின் நற்செயல்கள் வானத்திற்கு உயரவும் செய்யாது.  (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; அவன் தனது எசமானர்களிடம் திரும்பி வந்து சரணடையும் வரை. கணவனின் கோபத்திற்கு ஆளான பெண்; அவன் அவளை பொறுந்திக்கொள்ளும் வரை. போதையுள்ளவன்; அவன் தெளிவடையும் வரை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 1830)

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ أنبأ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ مَحْمَوَيْهِ الْعَسْكَرِيُّ بِالْأَهْوَازِ، ثنا أَبُو الْفَضْلِ جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ حَمَّادٍ الْقَلَانِسِيُّ بِالرَّمْلَةِ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ثنا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ وَلَا تَصْعَدُ لَهُمْ حَسَنَةٌ: الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ فَيَضَعَ يَدَهُ فِي أَيْدِيهِمْ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا، وَالسَّكْرَانُ حَتَّى يَصْحُوَ

تَفَرَّدَ بِهِ زُهَيْرٌ هَكَذَا


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-1830.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-1669.




إسناد فيه متهم بالوضع وهو محمد بن محمويه الأهوازي وهو متهم بالكذب

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42770-முஹம்மது பின் மஹ்மவைஹி என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-5355 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.