அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தவர் உளூச் செய்தவராக ஆகமாட்டார். உளூச்செய்யாமல் தொழுதவர் தொழுதவராக ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(பைஹகீ-குப்ரா: 196)وَقَدْ أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ، أنا يَحْيَى بْنُ صَاعِدٍ، أنا عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، ثنا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ أَبُو يَزِيدَ الظَّفَرِيُّ، ثنا أَيُّوبُ بْنُ النَّجَّارِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَا تَوَضَّأَ مَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ، وَمَا صَلَّى مَنْ لَمْ يَتَوَضَّأْ
وَهَذَا الْحَدِيثُ لَا يُعْرَفُ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ، وَكَانَ أَيُّوبُ بْنُ النَّجَّارِ، يَقُولُ: لَمْ أَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، إِلَّا حَدِيثًا وَاحِدًا، وَهُوَ حَدِيثُ: التَّقَى آدَمُ، وَمُوسَى، ذَكَرَهُ يَحْيَى بْنُ مَعِينٍ، فِيمَا رَوَاهُ عَنْهُ ابْنُ أَبِي مَرْيَمَ، فَكَانَ حَدِيثُهُ هَذَا مُنْقَطِعًا. وَاللهُ أَعْلَمُ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-196.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-176.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மஹ்மூத் பின் முஹம்மது பலவீனமானவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் விமர்சித்துள்ளார்கள். மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இதில் வரும் அய்யூப் பின் நஜ்ஜார் என்பவர் யஹ்யா பின் கஸீரிடம் ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்கித்துக்கொண்டனர் என்ற செய்தியை தவிர வேறு எதையும் செவியேற்கவில்லை என்று கூறியுள்ளார்கள். (நூல்: லிஸானுல் மீஸான் 8 / 9 ). இதை பதிவு செய்துள்ள பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களும் இந்த கருத்தை அடிக்குறிப்பில் கூறியுள்ளார்கள்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அபூதாவூத்-101 .
சமீப விமர்சனங்கள்