தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-10586

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்கள் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அவ்விரண்டையும் செய்பவர்கள் குறைவானவர்களே! அதை வழமையாக கடைப்பிடிப்பவர் சொர்க்கத்தில் நுழைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டும் எவை? என்று வினவினோம்.

அதற்கு “உங்களில் ஒருவர் ஒவ்வொரு கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின்பு ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும். தூங்கும் போது அவைகளை 100-தடவை கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பதும், படுக்கையில் 100 தடவையும் சேர்த்து) 250-நன்மைகளாகும்.

(நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.

இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தஹ்பீஹ் செய்யும் போது) கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்.

 

அவ்வாம் என்ற அறிவிப்பாளர் இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.

 

(நஸாயி: 10586)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اثْنَتَانِ يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، وَمَنْ يُحَافِظُ عَلَيْهِمَا دَخَلَ الْجَنَّةَ» قُلْنَا: يَا رَسُولَ اللهِ، مَا هُمَا؟ قَالَ: «يُسَبِّحُ أَحَدُكُمْ إِذَا فَرَغَ مِنْ صَلَاتِهِ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا، وَإِذَا أَرَادَ أَنْ يَنَامَ مِائَةً، فَذَلِكَ مِائَتَانِ وَخَمْسُونَ بِاللِّسَانِ، وَأَلْفَانِ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ» قَالَ عَبْدُ اللهِ: فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهَا بِيَدِهِ،

وَقَفَهُ الْعَوَّامُ


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10586.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10176.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களிடம், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    (ரஹ்)
    செவியேற்றது அதாஉ பின் ஸாயிப் நினைவாற்றல் மாறுவதற்கு முன் ஆகும். ஆரம்பத்தில் அவரிடம் செவியேற்று வந்த ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    (ரஹ்) அவர்கள், பின்னால் அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) நினைவாற்றலில் தடுமாறிபோது அவரை விட்டு விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பார்க்க : திர்மிதீ-3410 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.