ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
(நஸாயி: 11775)عَنْ سُوَيْدِ بْنِ نَصْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللهِ ِبْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الرَّجُلَ لَيُحْرَمَ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-11775.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-11274.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்லாஹ் பின் அபுல் ஜஃத் பற்றி இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்று அளிக்கவில்லை.
- மேலும் ஸவ்பான் (ரலி) ஷாம் நாட்டைச் சேர்ந்தவர். அப்துல்லாஹ் பின் அபுல் ஜஃத் கூஃபாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் செவியேற்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-90 .
சமீப விமர்சனங்கள்