தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-9878

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ரு தொழுகைக்கு பின், (மற்றவர்களிடம்) பேசுவற்கு முன் (கால்களை அகற்றாமல்) இருப்பில் அமர்ந்தவாறு “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து பியதிஹில் கைர் வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவனே உயிர்க் கொடுப்பவன். அவனே மரணிக்கச் செய்பவன். நன்மைகள் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

என்று பத்து முறை சொல்கிறவருக்கு ஒவ்வொரு முறைக்கும் பத்து நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) பத்து தீமைகளை அல்லாஹ் அழிக்கிறான். சொர்க்கத்தில் அவருக்கு பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும். ஒவ்வொரு முறைக்கும் அது ஒரு அடிமையை விடுதலை செய்வதற்குச் சமமான நற்பலன் பெற்றுக் கொடுக்கும். அந்த நாள் முழுதும் தீங்கிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அவர் பாதுகாக்கப்படுவார். அந்த நாளில் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் பாவத்தை தவிர வேறு எந்த பாவமும்  அவரை அழித்துவிடாது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(குப்ரா-நஸாயி: 9878)

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غُنْمٍ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَالَ دُبُرَ صَلَاةِ الْفَجْرِ وَهُوَ ثَانِي رِجْلِهِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ، كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ قَالَهَا مِنْهُنَّ حَسَنَةً، وَمَحَى عَنْهُ سَيِّئَةً، وَرُفِعَ بِهَا دَرَجَةً، وَكَانَ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ قَالَهَا عَتَقُ رَقَبَةٍ، وَكَانَ يَوْمَهُ ذَلِكَ فِي حِرْزٍ مِنْ كُلِّ مَكْرُوهٍ، وَحُرِسَ مِنَ الشَّيْطَانِ، وَلَمْ يَنْبَغِ لِذَنْبٍ أَنْ يُدْرِكَهُ فِي ذَلِكَ الْيَوْمِ إِلَّا الشِّرْكُ بِاللهِ


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-9878.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-9557.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-3474 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.