தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

முஅல்லக்

---

அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து

மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்

1. முர்ஸல்

2. முஃளல்

3. முன்கதிஃ

4. முஅல்லக்


 

முஅல்லக்

ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபிகள் நாயகம் அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய அறிவிக்கும் செய்திகளுக்கு முஅல்லக் எனப்படும்.

உதாரணம்:

“நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்”. என்று ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி- 634

இந்தச் செய்தியை பத்தொன்பதாவது பாடத்தில் (634 ) வது ஹதீஸின் கீழ்) புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கொண்டு வந்துள்ளார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அனைத்தையும் போக்கிவிட்டு ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களை மட்டும் குறிப்பிடுவதால் இது “முஅல்லக்” எனப்படும்.

(இந்த ஹதீஸின் முழுமையான அறிவிப்பாளர் தொடர் “ஸஹீஹ் முஸ்லிம்-608 லும் இடம்பெறுகிறது.)

இன்னும், இந்த வகை ஹதீஸ்களில் “முதல்லஸ்” என்று ஒரு வகையுள்ளது. இதைப் பற்றி 40ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.