தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-12806

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கஅபாவை சுற்றிவருவதின் நன்மை.

கஅபாவை சுற்றிவருபவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு நன்மை எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) ஒரு தீமை அழிக்கப்படும். சொர்க்கத்தில் அவருக்கு ஒரு அந்தஸ்து உயர்த்தப்படும்.

(மேலும்) இந்த கஅபாவை ஏழு முறை கணக்கிட்டு சுற்றிவருபவர் ஒரு அடிமையை உரிமைவிட்டவர் போன்றவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12806)

2- فِي ثَوَابِ الطَّوَافِ.

حدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :

مَنْ طَافَ بِالْبَيْتِ لَمْ يَرْفَعْ قَدَمًا ، وَلَمْ يَضَعْ أُخْرَى ، إِلاَّ كُتِبَتْ لَهُ بَهَا حَسَنَةٌ ، وَحُطَّتْ عَنْهُ بَهَا خَطِيئَةٌ ، وَرُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ.

وَسَمِعْتُهُ يَقُولُ : مَنْ أَحْصَى سُبُوعًا كَانَ كَعَدْلِ رَقَبَةٍ.


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12806.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-15474.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42155-முஹம்மது பின் ஃபுளைல் அவர்கள், அதாஉ அவர்களிடமிருந்து செவியேற்றது அதாஉ மூளைகுழம்பியபின் என்பதால் ஏராளமான தவறு ஏற்பட்டுள்ளது என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/319 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-2956 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.