அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாள் வருவதற்குமுன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்கப்படாமல் அவனை மட்டுமே வணங்கப்படவேண்டும் என்பதற்கு வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) நான் அனுப்பப்பட்டுவிட்டேன்.
(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 19401)حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
بُعِثْتُ بَيْنَ يَدَيِ السَّاعَةِ بِالسَّيْفِ حَتَّى يُعْبَدَ اللَّهُ وَحْدَهُ لَا يُشْرَكَ بِهِ شَيْءٌ وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي وَجُعِلَ الذِّلَّةُ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي , وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-19401.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-18833.
இந்த ஹதீஸின் கருத்து:
2:256 لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِۙ , قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّۚ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْۢ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى , لَا انْفِصَامَ لَهَا ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்;அறிந்தவன்.
இந்த வசனத்தின் மூலம் இஸ்லாத்தை ஏற்கக்கூறி யாரையும் வற்புறுத்தக்கூடாது என்று தெளிவாக தெரிகிறது. மேற்கண்ட ஹதீஸ் இந்தக் கருத்தைத் தரவில்லை. ஓரிறைக் கொள்கையை கூறியதால் அதைப்பிடிக்காதவர்கள் ஓரிறைக்கொள்கையுடையவர்களுக்கு தொல்லைகளைத் தந்து அடக்குமுறை செய்தனர். போருக்கு வந்தனர். அதனால் தான் அவர்களிடம் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்ப்புகள் இருக்கும் வரை அதை எதிர்கொள்ள வேண்டிய நிலை இஸ்லாமிய அரசுக்கு ஏற்படும். அதனால் ஜிஹாத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தான் இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .
சமீப விமர்சனங்கள்