தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-3457

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று முஸ்லிம்கள் பயணம் சென்றால் அவர்களில் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரே இமாமத் செய்யட்டும். அவர் மற்றவர்களை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் இமாமத் செய்யும் அவரே அவர்களின் அமீராவார்…

அறிவிப்பவர் : அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்)

(அபூஸலமா கூறினார்:)

சிறிய வயதாக இருந்தாலும் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமீராக்க கூறினார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3457)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ ثَوْرٍ الشَّامِيِّ، عَنْ مُهَاجِرِ بْنِ حَبِيبٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا خَرَجَ ثَلَاثَةٌ مُسْلِمِينَ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانَ أَصْغَرَهُمْ فَإِذَا أَمَّهُمْ فَهُوَ أَمِيرُهُمْ»، وَذَلِكَ أَمِيرٌ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-3457.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-3369.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஸலமா (ரஹ்) , நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்கவில்லையென்பதால் இது முர்ஸலான செய்தி.

மேலும் பார்க்க: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-3812 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.