ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது வலது கையை இடது கையின் மேல் வைத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3938)حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ عُمَيْرٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ أَبِيهِ قَالَ:
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-3938.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-3833.
- பழைய பிரதிகளில் தொப்புளுக்குக் கீழ் என்ற வாசகம் இல்லாமல் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து அதைத் தொப்புளுக்குக் கீழே வைத்ததை நான் பார்த்தேன் என்று புதிதாக அச்சிடப்பட்ட ஒரு பிரதியில் மட்டுமே உள்ளது. ஆனால் இது பிழையாகவோ அல்லது இடைச் செறுகலாகவோ இருக்கலாம்.
- முஹம்மத் ஹயாத் ஸின்தீ, ஸஃபியுர்ரஹ்மான் போன்றோர் இது முஸன்னஃப் இப்னு அபீஷைபாவில் அடுத்தடுத்து உள்ள இரு செய்திகளை (எண்-3938, 3939) பிரதி எடுத்த யாரோ ஒருவர், ஒரு வரியை விட்டு விட்டு இரு செய்திகளையும் சேர்த்து விட்டதால் ஏற்பட்ட தவறு என்று கூறியுள்ளனர்.
- மேலும் இதே அறிவிப்பாளர்தொடரில் முஸ்னத் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரகுத்னீயில் வரும் செய்திகளில் தொப்புளுக்குக் கீழே என்ற வாசகம் இல்லை. பார்க்க : முஸ்னத் அஹ்மத்-18846 , தாரகுத்னீ-1101 .
எனவே இப்னுஅபீஷைபாவில் வரும் இந்த வாசகம் பிழையாகும்.
3 . இந்தக் கருத்தில் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3938 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-756 .
சமீப விமர்சனங்கள்