தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-3938

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

3938. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது வலது கையை இடது கையின் மேல் வைத்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: (ரலி)

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

وائل بن حجر

இறப்பு: முஆவியா (ரலி) ஆட்சிக்காலத்தில் மரணமடைந்தார்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: வாயில் பின் ஹுஜ்ர் பின் ஸஅத் பின் மஸ்ரூக் பின் வாயில் பின் ளம்அஜ் பின் ரபீஆ பின் வாயில் பின் அன்நுஃமான் அல்ஹழ்ரமீ

தந்தை பெயர்: ஹுஜ்ர்

புனைப்பெயர்: அபூ ஹிந்த், அபூ ஹுனைதா

ஊர் பெயர்: ஹழ்ரமவ்த்

பயணித்த ஊர்கள்: யமன், மதீனா, கூஃபா

பிறப்பு: யமன்

இறப்பு: முஆவியா (ரலி) ஆட்சிக்காலத்தில் மரணமடைந்தார்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) ஒரு நபித்தோழர் ஆவார். அவர் யமன் நாட்டின் ஹழ்ரமவ்த் பகுதியைச் சேர்ந்தவர். அவர் ஒரு மன்னராக இருந்தார்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் இவரை கண்ணியப்படுத்தி, இவருக்கு நிலங்களை வழங்கினார்கள். இவர் கூஃபா நகரில் வசித்தார்.

முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் நபி (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல் ஜப்பார் பின் வாயில், அல்கமா பின் வாயில் பின் ஹுஜ்ர், ஹஜ்ர் பின் அல்அன்பஸ் அல்ஹழ்ரமீ, குலைப் பின் ஷிஹாப், அப்துர்ரஹ்மான் பின் நம்ர் அல்யஹ்ஸபீ


ஆதாரம்: muslimscholars.info (3045) · Should verify


حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ عُمَيْرٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ أَبِيهِ قَالَ:

«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-3938.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-3833.



  • பழைய பிரதிகளில் தொப்புளுக்குக் கீழ் என்ற வாசகம் இல்லாமல் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து அதைத் தொப்புளுக்குக் கீழே வைத்ததை நான் பார்த்தேன் என்று புதிதாக அச்சிடப்பட்ட ஒரு பிரதியில் மட்டுமே உள்ளது. ஆனால் இது பிழையாகவோ அல்லது இடைச் செறுகலாகவோ இருக்கலாம்.
  • முஹம்மத் ஹயாத் ஸின்தீ, ஸஃபியுர்ரஹ்மான் போன்றோர் இது முஸன்னஃப் இப்னு அபீஷைபாவில் அடுத்தடுத்து உள்ள இரு செய்திகளை (எண்-3938, 3939) பிரதி எடுத்த யாரோ ஒருவர், ஒரு வரியை விட்டு விட்டு இரு செய்திகளையும் சேர்த்து விட்டதால் ஏற்பட்ட தவறு என்று கூறியுள்ளனர்.
  • மேலும் இதே அறிவிப்பாளர்தொடரில் முஸ்னத் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    தாரகுத்னீயில் வரும் செய்திகளில் தொப்புளுக்குக் கீழே என்ற வாசகம் இல்லை. பார்க்க : முஸ்னத் அஹ்மத்-18846 , தாரகுத்னீ-1101 .

எனவே இப்னுஅபீஷைபாவில் வரும் இந்த வாசகம் பிழையாகும்.

3 . இந்தக் கருத்தில் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3938 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-756 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.