தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1042

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் (மேற்கண்டவாறு) திக்ர் செய்வார்கள்” என்று அறிவித்துவிட்டு, பிறகு இறுதியாக “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இந்த திக்ருகளைக் கூறுவார்கள்” என்று கூறினார்கள் என்றும் தெரிவித்தார்கள்.

– அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரையாற்றும்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தொழுகை” அல்லது “தொழுகைகளுக்கு”ப் பின் சலாம் கொடுத்தவுடன் மேற்கண்டவாறு கூறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 5

(முஸ்லிம்: 1042)

وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ مَوْلًى لَهُمْ

أَنَّ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ كَانَ يُهَلِّلُ دُبُرَ كُلِّ صَلَاةٍ بِمِثْلِ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ وَقَالَ فِي آخِرِهِ: ثُمَّ يَقُولُ ابْنُ الزُّبَيْرِ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهَلِّلُ بِهِنَّ دُبُرَ كُلِّ صَلَاةٍ.

– وَحَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ، حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ، يَخْطُبُ عَلَى هَذَا الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ إِذَا سَلَّمَ فِي دُبُرِ الصَّلَاةِ أَوِ الصَّلَوَاتِ، فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ.


Muslim-Tamil-1042.
Muslim-TamilMisc-935.
Muslim-Shamila-594.
Muslim-Alamiah-935.
Muslim-JawamiulKalim-940.




மேலும் பார்க்க : முஸ்லிம்-1041 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.