அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸியாத் பின் உபைத் அஸ்ஸகஃபீ என்பார் (அபூசுஃப்யான் (ரலி) அவர்களுடைய புதல்வர் என்று) அழைக்கப்பட்டபோது, நான் அபூபக்ரா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் “ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்? சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் “யார் இஸ்லாத்தில் தம் தந்தையல்லாத வேறொருவரை -அவர் தம் தந்தையல்ல என்று தெரிந்துகொண்டே- தம் தந்தை என்று கூறுகின்றாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற என் காதுகளால் கேட்டேன் எனக் கூறியுள்ளார்களே!” என்று சொன்னேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் “நானும் இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்று சொன்னார்கள்.
Book : 1
(முஸ்லிம்: 114)(63) حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا هُشَيْمُ بْنُ بَشِيرٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ
لَمَّا ادُّعِيَ زِيَادٌ لَقِيتُ أَبَا بَكْرَةَ، فَقُلْتُ لَهُ: مَا هَذَا الَّذِي صَنَعْتُمْ؟ إِنِّي سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ: سَمِعَ أُذُنَايَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «مَنِ ادَّعَى أَبًا فِي الْإِسْلَامِ غَيْرَ أَبِيهِ، يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ»
فَقَالَ أَبُو بَكْرَةَ: أَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Tamil-114
Shamila-63
JawamiulKalim-98
சமீப விமர்சனங்கள்