தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1420

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது “தக்பீர் (தஹ்ரீம்)” கூறுவார்கள். பிறகு “வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய” ஓதுவார்கள். அதில் (“வ அன மினல் முஸ்லிமீன்” என்பதற்கு பதிலாக) வ அன அவ்வலுல் முஸ்லிமீன் (நான் முஸ்லிம்களில் முதல்வன் ஆவேன்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கிறான்.) “ரப்பனா வ லக்கல் ஹம்து” (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது)” என்று கூறுவார்கள். சஜ்தாவில் “சஜத வஜ்ஹீ லில்லதீ… ஸவ்வரஹு ஃப அஹ்சன ஸுவரஹு” (முகத்தை அழகிய முறையில் வடிவமைத்த…) என்று கூறுவார்கள். சலாம் கொடுக்கும்போது “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து…” என்று (மேற்கண்ட) ஹதீஸில் உள்ளவை போன்று இறுதிவரை ஓதுவார்கள். “அத்தஹிய்யாத்துக்கும் சலாமுக்குமிடையே” எனும் குறிப்பு இடம்பெற வில்லை.

Book : 6

(முஸ்லிம்: 1420)

وَحَدَّثَنَاهُ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو النَّضْرِ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنِ الْأَعْرَجِ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ، ثُمَّ قَالَ: «وَجَّهْتُ وَجْهِي»، وَقَالَ: «وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ»، وَقَالَ: وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ»، وَقَالَ: «وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُوَرَهُ»، وَقَالَ: وَإِذَا سَلَّمَ، قَالَ: «اللهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ» إِلَى آخِرِ الْحَدِيثِ، وَلَمْ يَقُلْ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ


Tamil-1420
Shamila-771
JawamiulKalim-1296




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.