தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1569

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஉபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் (ஜுமுஆ நாளில்) பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் உம்மில் ஹகம் உட்கார்ந்தபடியே (குத்பா) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். உடனே கஅப் (ரலி) அவர்கள் “(இதோ) இந்த மோசமான ஆளைப் பாருங்கள்: உட்கார்ந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார். உயர்ந்தோன் அல்லாஹ் “அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்” (62:11) என்று கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 7

(முஸ்லிம்: 1569)

وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ

دَخَلَ الْمَسْجِدَ وَعَبْدُ الرَّحْمَنِ ابْنُ أُمِّ الْحَكَمِ يَخْطُبُ قَاعِدًا، فَقَالَ: ” انْظُرُوا إِلَى هَذَا الْخَبِيثِ يَخْطُبُ قَاعِدًا، وَقَالَ اللهُ تَعَالَى: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11]


Tamil-1569
Shamila-864
JawamiulKalim-1437




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.