தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1660

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 4

கிரகணத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் (ஒரு ரக்அத்திற்கு நான்கு ருகூஉகள்; இரண்டு சஜ்தாக்கள் வீதம் மொத்தம்) எட்டு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள் என்று கூறுவோரின் ஆதாரம்.

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியகிரகணம் ஏற்பட்டபோது (ரக்அத்திற்கு நான்கு ருகூஉகள்; இரண்டு சஜ்தாக்கள் வீதம்) எட்டு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்(து இரு ரக்அத்கள் தொழு)தார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 10

(முஸ்லிம்: 1660)

4 – بَابُ ذِكْرِ مَنْ قَالَ: إِنَّهُ رَكَعَ ثَمَانِ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

«صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ كَسَفَتِ الشَّمْسُ، ثَمَانَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ». وَعَنْ عَلِيٍّ مِثْلُ ذَلِكَ


Muslim-Tamil-1660.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-908.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1519.




6 comments on Muslim-1660

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் ஒரு ரக்அத்திற்கு நான்கு ருகூஃகள், இரண்டு சஜ்தாக்கள் வீதம் 8 ருகூஃகளும் 4 சஜ்தாக்களும் செய்ததாக வருகிறது. ஆனால் மற்ற ஹதீஸ்களில் ஒரு ரக்அத்திற்கு 2 ருகூஃகள், 2 சஜ்தாக்கள் வீதம் 4 ருகூஃகளும் 4 சஜ்தாக்களும் செய்ததாக வருகிறது. அப்படியானால் மற்ற ஸஹீஹான ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸ் “ஷாத்” என்ற தரத்துக்கு போய்விடுமா? அல்லது இரண்டு விதமாகவும் தொழுதுக் கொள்ளலாம் என்று புரிந்துக்கொள்வதா?

    1. வ அலைக்கும் ஸலாம். ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் இதை பலவாறு அறிவித்துள்ளனர். மேற்கண்ட செய்தி தவறு என்றே தெரிகிறது. இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் செய்திகளை ஒன்று சேர்க்கும்போது விரிவாக பதிவிடுவோம்.
      இதில் இடம்பெறும் ஹபீப் அவர்கள், தாவூஸ் அவர்களிடம் செவியுறவில்லை என்றும் விமர்சனம் உள்ளது.

      1. ஜஸாக்கல்லாஹ் ஹைரன். இதுபோன்று ஒவ்வொரு ஹதீஸ் சம்பந்தமான உங்கள் ஆய்வுகள் முடிந்து அதன் விபர அறிக்கையை நீங்கள் இணைத்த பிறகு நாங்கள் அதைத் தெரிந்துக் கொள்வதற்கு Notification மாதிரி ஏதாவது ஆப்ஷன் உள்ளதா? அல்லது மெயில் மூலமாக தெரிவிக்க முடியுமா? ஏதாவது ஒரு வழி இருந்தால் சிறப்பாக இருக்குமே

  2. சில ஹதீஸ்களில் ஆய்வின் சுருக்கம், விரிவான தகவல் இருக்கும். தக்ரீஜ் இருக்கும். இது போன்ற செய்திகளில் உறுதியாக அது சரியானது என்றோ அல்லது பலவீனமானது என்றோ ஆய்வில் தெரிந்தால் அதன் விவரம் இருக்கும்.

    அறிவிப்பாளர்கள் பற்றியும் ஹதீஸின் கருத்துபற்றியும் கருத்துவேறுபாடு உள்ளவைகளுக்கு அதிகம் காலம் தேவைப்படும் என்பதால் அதை அவ்வப்போது விரிவாக பார்த்து பதிவு செய்கிறோம்.

    ஆரம்பத்தில் புகாரி, முஸ்லிம் செய்திகளை தனித்தனியாக பதிவு செய்யும்போது ஸஹீஹ் என்றே தரம் கொடுத்திருந்தோம். இதைப் பற்றி விரிவாக பார்க்கும் போது தரம் மாறுபடும்.

    ஏற்கனவே சுருக்கமாக பதிவு செய்த செய்திகளைப் பற்றிய ஆய்வு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கும். இந்தச் செய்திகளைப் பற்றிய கேள்வி வரும்போது அதற்கேற்றவாறு விரிவாக ஹதீஸ்தகவலை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். துஆச் செய்யவும்.

    இன்ஷா அல்லாஹ் நீங்கள் கேட்கும் Notification பற்றி அட்மின் அவர்கள் பரிசீலிப்பார்கள்.

    1. வெகு சிலர் மட்டுமே செய்யக்கூடிய இந்தப் பணியை செய்பவர்களில் உங்கள் டீமும் ஒன்று, அல்ஹம்துலில்லாஹ். அதற்கிடையில் எங்களுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருப்பது எங்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. அந்த வகையிலும் கண்டிப்பாக எங்களுடைய துஆக்கள் உங்களுக்கு உண்டு. உங்கள் பணிகளை அல்லாஹ் லேசாக்கித் தருவானாக! அவற்றை உங்கள் அனைவருக்கும் மறுமைப் பலனாக்கித் தருவானாக! அல்லாஹ் நம் துஆக்களை ஏற்றுக்கொள்வானாக!

      Notification பற்றி பரிசீலிப்பதாக சொன்னதும் மிக்க சந்தோஷம், அல்ஹம்துலில்லாஹ்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.