தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1691

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஏன் அழுகிறீர்? எனக்காகவா அழுகிறீர்?” என்று கேட்டார்கள். ஸுஹைப் (ரலி) அவர்கள் “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீதாணையாக! “எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறிந்தே உள்ளீர்” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் “இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்” என்றார்கள்.

Book : 11

(முஸ்லிம்: 1691)

وحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ صَفْوَانَ أَبُو يَحْيَى، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِي مُوسَى، قَالَ

لَمَّا أُصِيبَ عُمَرُ أَقْبَلَ صُهَيْبٌ مِنْ مَنْزِلِهِ، حَتَّى دَخَلَ عَلَى عُمَرَ، فَقَامَ بِحِيَالِهِ يَبْكِي، فَقَالَ عُمَرُ: عَلَامَ تَبْكِي؟ أَعَلَيَّ تَبْكِي؟ قَالَ: إِي وَاللهِ لَعَلَيْكَ أَبْكِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، قَالَ: وَاللهِ لَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يُبْكَى عَلَيْهِ يُعَذَّبُ»، قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُوسَى بْنِ طَلْحَةَ، فَقَالَ: كَانَتْ عَائِشَةُ تَقُولُ: إِنَّمَا كَانَ أُولَئِكَ الْيَهُودَ


Tamil-1691
Shamila-927
JawamiulKalim-1547




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.