தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1888

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37

ஆசையோடு எதிர்பார்க்காமலும், யாசிக்காமலும் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அதை அவர் பெற்றுக்கொள்ளலாம்.

 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் “என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்” என்று சொல்வேன். (ஒருமுறை இவ்வாறு) அவர்கள் எனக்குப் பொருள் ஒன்றைக் கொடுத்தபோது “என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்கள்” என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களிடம் வருகிறதோ அதை (மறுக்காமல்) பெற்றுக்கொள்ளுங்கள். இ(வ்வாறு ஏதும் கிடைக்கவி)ல்லையாயின், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 12

(முஸ்லிம்: 1888)

37 – بَابُ إِبَاحَةِ الْأَخْذِ لِمَنْ أُعْطِيَ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ وَلَا إِشْرَافٍ

وحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، ح وحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ

قَدْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي الْعَطَاءَ، فَأَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالًا، فَقُلْتُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهُ، وَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلَا سَائِلٍ فَخُذْهُ، وَمَا لَا، فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ»


Tamil-1888
Shamila-1045
JawamiulKalim-1738




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.