தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1954

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54

தர்மம் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல்.

 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தார் தம் தர்மப்பொருட்களைக் கொண்டுவந்தால், “இறைவா! இவர்களுக்கு நீ அருள்புரிவாயாக!” என்று பிரார்த்திப்பார்கள். என் தந்தை அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் தம் தர்மப் பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றபோது, “இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு நீ அருள்புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் (“அபூஅவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு” என்பதற்கு பதிலாக) “அவர்களு(டைய குடும்பத்தார்களு)க்கு அருள்புரிவாயாக” என்று (பிரதிப் பெயர்ச்சொல்லாக) இடம் பெற்றுள்ளது.

Book : 12

(முஸ்லிம்: 1954)

54 – بَابُ الدُّعَاءِ لِمَنْ أَتَى بِصَدَقَتِهِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي أَوْفَى، ح وحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرٍو وَهُوَ ابْنُ مُرَّةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَبِي أَوْفَى، قَالَ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ، قَالَ: «اللهُمَّ صَلِّ عَلَيْهِمْ» فَأَتَاهُ أَبِي، أَبُو أَوْفَى بِصَدَقَتِهِ، فَقَالَ: «اللهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»

– وَحَدَّثَنَاه ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ: «صَلِّ عَلَيْهِمْ»


Tamil-1954
Shamila-1078
JawamiulKalim-1798




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.