அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்றுகொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள். பிறகு தமது இல்லத்திற்குள் சென்று, எங்களுடன் தொழாத விதத்தில் (நீளமாகத்) தொழுதார்கள். காலையில் நாங்கள் அவர்களிடம் “இந்த இரவு (உங்களுக்குப் பின்னால் இருந்த) எங்களைத் தாங்கள் அறிந்தீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “ஆம். அதுதான் நான் எதைச் செய்தேனோ அதைச் செய்ததற்கு (சுருக்கித் தொழுததற்கு)க் காரணமாக அமைந்தது” என்று சொன்னார்கள். அந்த மாதத்தின் இறுதியில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்கலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொடர்நோன்பு நோற்கிறார்கள்! நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர். கவனத்தில் வையுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த மாதம் இன்னும் தள்ளிப்போயிருந்தால் (உங்களால் தொடர இயலாத அளவிற்கு) இன்னும் பல நாட்கள் நான் தொடர்நோன்பு நோற்றிருப்பேன். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுவோர் தங்கள் போக்கைக் கைவிட்டிருப்பர்” என்று சொன்னார்கள்.
Book : 13
(முஸ்லிம்: 2014)حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُصَلِّي فِي رَمَضَانَ، فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ وَجَاءَ رَجُلٌ آخَرُ، فَقَامَ أَيْضًا حَتَّى كُنَّا رَهْطًا فَلَمَّا حَسَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّا خَلْفَهُ جَعَلَ يَتَجَوَّزُ فِي الصَّلَاةِ، ثُمَّ دَخَلَ رَحْلَهُ، فَصَلَّى صَلَاةً لَا يُصَلِّيهَا عِنْدَنَا، قَالَ: قُلْنَا لَهُ: حِينَ أَصْبَحْنَا أَفَطَنْتَ لَنَا اللَّيْلَةَ قَالَ: فَقَالَ: «نَعَمْ، ذَاكَ الَّذِي حَمَلَنِي عَلَى الَّذِي صَنَعْتُ» قَالَ: فَأَخَذَ يُوَاصِلُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَاكَ فِي آخِرِ الشَّهْرِ، فَأَخَذَ رِجَالٌ مِنْ أَصْحَابِهِ يُوَاصِلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ رِجَالٍ يُوَاصِلُونَ، إِنَّكُمْ لَسْتُمْ مِثْلِي، أَمَا وَاللهِ، لَوْ تَمَادَّ لِي الشَّهْرُ لَوَاصَلْتُ وِصَالًا يَدَعُ الْمُتَعَمِّقُونَ تَعَمُّقَهُمْ»
Tamil-2014
Shamila-1104
JawamiulKalim-1855
சமீப விமர்சனங்கள்