அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் அல்ஹகம், “பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்த மனிதர் நோன்பு நோற்கலாமா?” என்பது குறித்துக் கேட்பதற்காக என்னை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பினார். (அவ்வாறே நான் கேட்டதற்கு) “நபி (ஸல்) அவர்கள் (இரவில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பெருந்துடக்குடன் -உறக்க ஸ்கலிதத்தால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பை(த் தொடர்வார்களே தவிர) விட்டுவிடமாட்டார்கள்; (பின்னாளில் “களா” வாகத்) திரும்ப நோற்கவுமாட்டார்கள்” என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
Book : 13
(முஸ்லிம்: 2032)حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، وَهُوَ ابْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ رَبِّهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ، أَنَّ أَبَا بَكْرٍ، حَدَّثَهُ
أَنَّ مَرْوَانَ أَرْسَلَهُ إِلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا يَسْأَلُ عَنِ الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا، أَيَصُومُ؟ فَقَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ، لَا مِنْ حُلُمٍ، ثُمَّ لَا يُفْطِرُ وَلَا يَقْضِي»
Tamil-2032
Shamila-1109
JawamiulKalim-1873
சமீப விமர்சனங்கள்