கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் செவியுற்றேன். அது எனக்கு வியப்பூட்டவே, “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறாத ஒன்றை அவர்கள் கூறியதாகச் சொல்வேனா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது தகாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
Book : 13
(முஸ்லிம்: 2095)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ وَهُوَ ابْنُ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ مِنْهُ حَدِيثًا فَأَعْجَبَنِي، فَقُلْتُ لَهُ: آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: فَأَقُولُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ أَسْمَعْ؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ
لَا يَصْلُحُ الصِّيَامُ فِي يَوْمَيْنِ: يَوْمِ الْأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ، مِنْ رَمَضَانَ
Tamil-2095
Shamila-827
JawamiulKalim-1929
சமீப விமர்சனங்கள்