அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தொடர்ந்து (பகலெல்லாம்) நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது “அவர்கள் என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்” அல்லது “நானாக அவர்களைச் சந்தித்தேன்.” அவர்கள், “நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் (உறங்காமல்) இரவெல்லாம் நின்று தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! அவ்வாறு செய்யாதீர். ஏனெனில், உமது கண்ணுக்கு (நீர்) அளிக்க வேண்டிய பங்கு உண்டு; உமது உடலுக்கு அளிக்கவேண்டிய பங்கும் உண்டு. உம் வீட்டாருக்கு அளிக்கவேண்டிய பங்கும் உண்டு. எனவே, (சில நாள்) நோன்பு நோற்று, (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! பத்து நாட்களுக்கு ஒரு முறை நோன்பு நோற்றுக்கொள்வீராக! (மற்ற) ஒன்பது நாட்களுக்கும் உமக்கு நற்பலன் உண்டு” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதைவிட அதிகமாகச் செய்வதற்கு நான் சக்தி பெற்றுள்ளேன்” என்றேன். “அவ்வாறாயின் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) அவர்கள் எவ்வாறு நோன்பு நோற்பார்கள்?” என்று கேட்டேன். அதற்கு “அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டுவிடுவார்கள். மேலும், (போர் முனையில்) எதிரிகளைச் சந்திக்கும்போது பின் வாங்கமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (தாவூத் நபியின் வீரத்தை நான் பெறஇயலுமா?) இந்தக் குணத்திற்காக எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?” என்று கேட்டேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த உரையாடலுக்கிடையே) ஆயுள் நோன்பு நோற்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். (ஆயினும், பின்வருமாறு கூறினார்கள் என்று நான் எண்ணுகிறேன்:) “காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்” என்று நபியவர்கள் (மூன்று முறை) கூறினார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது:
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸை (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிப்பவரான கவிஞர் அபுல்அப்பாஸ் அஸ்ஸாயிப் பின் ஃபர்ரூக் (ரஹ்) அவர்கள் மக்காவாசிகளில் ஒருவராவார்; நம்பத்தகுந்தவரும் நேர்மையானவரும் ஆவார்.
Book : 13
(முஸ்லிம்: 2141)وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، يَزْعُمُ أَنَّ أَبَا الْعَبَّاسِ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا، يَقُولُ
بَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَصُومُ أَسْرُدُ، وَأُصَلِّي اللَّيْلَ، فَإِمَّا أَرْسَلَ إِلَيَّ وَإِمَّا لَقِيتُهُ، فَقَالَ: «أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ وَلَا تُفْطِرُ، وَتُصَلِّي اللَّيْلَ؟ فَلَا تَفْعَلْ، فَإِنَّ لِعَيْنِكَ حَظًّا، وَلِنَفْسِكَ حَظًّا، وَلِأَهْلِكَ حَظًّا، فَصُمْ وَأَفْطِرْ، وَصَلِّ وَنَمْ، وَصُمْ مِنْ كُلِّ عَشَرَةِ أَيَّامٍ يَوْمًا، وَلَكَ أَجْرُ تِسْعَةٍ» قَالَ: إِنِّي أَجِدُنِي أَقْوَى مِنْ ذَلِكَ، يَا نَبِيَّ اللهِ، قَالَ: «فَصُمْ صِيَامَ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ» قَالَ: وَكَيْفَ كَانَ دَاوُدُ يَصُومُ؟ يَا نَبِيَّ اللهِ، قَالَ: «كَانَ يَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا، وَلَا يَفِرُّ إِذَا لَاقَى» قَالَ: مَنْ لِي بِهَذِهِ؟ يَا نَبِيَّ اللهِ، – قَالَ عَطَاءٌ: فَلَا أَدْرِي كَيْفَ ذَكَرَ صِيَامَ الْأَبَدِ – فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ، لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ، لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ»
– وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ: إِنَّ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ أَخْبَرَهُ. قَالَ مُسْلِم: «أَبُو الْعَبَّاسِ السَّائِبُ بْنُ فَرُّوخَ، مِنْ أَهْلِ مَكَّةَ ثِقَةٌ عَدْلٌ»
Tamil-2141
Shamila-1159
JawamiulKalim-1973
சமீப விமர்சனங்கள்