தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2183

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

இஃதிகாஃப் இருக்க முடிவு செய்தவர், இஃதிகாஃப் இருக்குமிடத்திற்குள் எப்போது நுழைய வேண்டும்?

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஃதிகாஃப்” மேற்கொள்ள நாடினால், ஃபஜ்ர் தொழுகை தொழுதுவிட்டுப் பின்னர் “இஃதிகாஃப்” இருக்குமிடத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். (ஒருமுறை இஃதிகாஃப் இருப்பதற்காக) தமது கூடாராத்தை அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே கூடாரம் அமைக்கப்பட்டது. அவர்கள் ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கவே விரும்பினார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் (தமக்காக) ஒரு கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள்; (அவர்களுக்காகவும்) கூடாரம் அமைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டனர்; அவர்களுக்காகவும் கூடாரம் அமைக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை முடித்தபோது (பள்ளிவாசலுக்குள்) பல கூடாரங்களைக் கண்டார்கள். “(இதன்மூலம்) நீங்கள் நன்மையைத்தான் நாடினீர்களா?” என்று கேட்டுவிட்டு, தமது கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அகற்றப்பட்டது. (அந்த ஆண்டில்) ரமளான் மாதத்தில் இஃதிகாஃப் இருப்பதைக் கைவிட்டு, ஷவ்வால் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் இப்னு உயைனா (ரஹ்), அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்), இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஸைனப் (ரலி) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பதற்காகக் கூடாரம் அமைத்தனர்” எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

Book : 14

(முஸ்லிம்: 2183)

2 – بَابُ مَتَى يَدْخُلُ مَنْ أَرَادَ الِاعْتِكَافَ فِي مُعْتَكَفِهِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ، ثُمَّ دَخَلَ مُعْتَكَفَهُ وَإِنَّهُ أَمَرَ بِخِبَائِهِ فَضُرِبَ، أَرَادَ الِاعْتِكَافَ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَأَمَرَتْ زَيْنَبُ بِخِبَائِهَا فَضُرِبَ، وَأَمَرَ غَيْرُهَا مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخِبَائِهِ فَضُرِبَ، فَلَمَّا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، نَظَرَ، فَإِذَا الْأَخْبِيَةُ فَقَالَ: «آلْبِرَّ تُرِدْنَ؟» فَأَمَرَ بِخِبَائِهِ فَقُوِّضَ، وَتَرَكَ الِاعْتِكَافَ فِي شَهْرِ رَمَضَانَ، حَتَّى اعْتَكَفَ فِي الْعَشْرِ الْأَوَّلِ مِنْ شَوَّالٍ

– وحَدَّثَنَاه ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وحَدَّثَنِي عَمْرُو بْنُ سَوَّادٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، كُلُّ هَؤُلَاءِ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمَعْنَى حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ. وَفِي حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ، وَعَمْرِو بْنِ الْحَارِثِ، وَابْنِ إِسْحَاقَ، ذِكْرُ عَائِشَةَ، وَحَفْصَةَ، وَزَيْنَبَ رَضِيَ اللهُ عَنْهُنَّ، أَنَّهُنَّ ضَرَبْنَ الْأَخْبِيَةَ لِلِاعْتِكَافِ


Tamil-2183
Shamila-1172
JawamiulKalim-2014




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.