ஹஜ்
பாடம் : 1
ஹஜ் அல்லது உம்ராவிற்காக ‘இஹ்ராம்’ கட்டியவருக்கு அனுமதிக்கப்பட்டவையும் அனுமதிக்கப்படாதவையும்; அவர் நறுமணம் பூசுவது தடை செய்யப்பட்டுள்ளதும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஹ்ராம்” கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(முழு நீளச்) சட்டைகள், தலைப் பாகைகள், முழுக் கால்சட்டைகள்,முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸா) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்துகொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். குங்குமப்பூ மற்றும் “வர்ஸ்” ஆகிய வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட எந்த ஆடைகளையும் அணியாதீர்கள்” என்று கூறினார்கள்.
Book : 15
15 – كِتَابُ الْحَجِّ
1 – بَابُ مَا يُبَاحُ لِلْمُحْرِمِ بِحَجٍّ أَوْ عُمْرَةٍ، وَمَا لَا يُبَاحُ وَبَيَانِ تَحْرِيمِ الطِّيبِ عَلَيْهِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْبَسُوا الْقُمُصَ، وَلَا الْعَمَائِمَ، وَلَا السَّرَاوِيلَاتِ، وَلَا الْبَرَانِسَ، وَلَا الْخِفَافَ، إِلَّا أَحَدٌ لَا يَجِدُ النَّعْلَيْنِ، فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلَا تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ وَلَا الْوَرْسُ»
Tamil-2188
Shamila-1177
JawamiulKalim-
சமீப விமர்சனங்கள்