ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) “ஜிஅரானா” எனுமிடத்தில் இருந்தபோது, அவர்களிடம் நறுமணம் (அல்லது மஞ்சள் நிற அடையாளம்) பூசப்பட்ட மேலங்கி அணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர், “நான் எனது உம்ராவில் என்ன செய்யவேண்டுமென உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வந்தது. உடனே அவர்கள் ஒரு துணியால் மறைக்கப்பட்டார்கள். -(என் தந்தை) யஅலா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று கூறுவார்கள். – “நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க நீர் விரும்புகிறீரா?” என உமர் (ரலி) அவர்கள் கேட்டுவிட்டு, (நபியவர்களை மறைத்திருந்த) அந்தத் துணியின் ஓரத்தை விலக்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் இளம் ஒட்டகம் குறட்டை விடுவதைப் போன்று குறட்டை விட்டுக்கொண்டிருந்ததை அப்போது நான் கண்டேன்.
பிறகு (அந்தச் சிரமநிலை) அவர்களைவிட்டு விலகியபோது, “என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். (அந்த மனிதர் வந்ததும்), ” “உம்மீதுள்ள மஞ்சள் நிற அடையாளத்தை” அல்லது “நறுமணத்தின் அடையாளத்தை” கழுவிக்கொள்க. உமது அங்கியை களைந்துகொள்க. மேலும், நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க” என்று விடையளித்தார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2193)حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْجِعْرَانَةِ، عَلَيْهِ جُبَّةٌ وَعَلَيْهَا خَلُوقٌ – أَوْ قَالَ أَثَرُ صُفْرَةٍ – فَقَالَ: كَيْفَ تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي عُمْرَتِي؟ قَالَ: وَأُنْزِلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَحْيُ، فَسُتِرَ بِثَوْبٍ، وَكَانَ يَعْلَى يَقُولُ: وَدِدْتُ أَنِّي أَرَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ نَزَلَ عَلَيْهِ الْوَحْيُ، قَالَ فَقَالَ: أَيَسُرُّكَ أَنْ تَنْظُرَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ؟ قَالَ: فَرَفَعَ عُمَرُ طَرَفَ الثَّوْبِ، فَنَظَرْتُ إِلَيْهِ لَهُ غَطِيطٌ، – قَالَ وَأَحْسَبُهُ قَالَ – كَغَطِيطِ الْبَكْرِ، قَالَ فَلَمَّا سُرِّيَ عَنْهُ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنِ الْعُمْرَةِ؟ اغْسِلْ عَنْكَ أَثَرَ الصُّفْرَةِ – أَوْ قَالَ أَثَرَ الْخَلُوقِ – وَاخْلَعْ عَنْكَ جُبَّتَكَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ مَا أَنْتَ صَانِعٌ فِي حَجِّكَ»
Tamil-2193
Shamila-1180
JawamiulKalim-2024
சமீப விமர்சனங்கள்