தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2195

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என ஆசையாக உள்ளது)” என்று கூறுவார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு அருகிலுள்ள) “ஜிஅரானா” எனுமிடத்தில் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மேலே துணியொன்று நிழலுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளிட்ட அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர்.

அப்போது அதிகமாக நறுமணம் பூசிய, கம்பளியாலான அங்கியணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அதிகமாக நறுமணம் பூசப்பட்ட அங்கியால் “இஹ்ராம்” கட்டியவர் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அவரை நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அமைதியாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெற்றது. உடனே உமர் (ரலி) அவர்கள், “இங்கு வாருங்கள்” என சைகையால் (என் தந்தை) யஅலா (ரலி) அவர்களை அழைத்தார்கள்.

(என் தந்தை யஅலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:)

நான் சென்று (நபி (ஸல்) அவர்களுக்கு மேலே கட்டப்பட்டிருந்த துணிக்குள்) எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்ட நிலையில் சிறிது நேரம் காணப்பெற்றார்கள். பிறகு அவர்களைவிட்டு அந்த (சிரம)நிலை விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். அந்த மனிதர் தேடப்பட்டு, அழைத்துவரப்பட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மீதுள்ள நறுமணத்தை மூன்றுமுறை கழுவிக்கொள்க. (தைக்கப்பட்டுள்ள உமது) அங்கியைக் களைந்து விடுக. (தைக்கப்படாத ஆடை அணிந்து கொள்க.) பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க” என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2195)

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، ح وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وحَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا عِيسَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى بْنِ أُمَيَّةَ، أَخْبَرَهُ

أَنَّ يَعْلَى كَانَ يَقُولُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ: لَيْتَنِي أَرَى نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يُنْزَلُ عَلَيْهِ، فَلَمَّا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِعْرَانَةِ، وَعَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ عَلَيْهِ، مَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فِيهِمْ عُمَرُ، إِذْ جَاءَهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ، مُتَضَمِّخٌ بِطِيبٍ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ فِي جُبَّةٍ بَعْدَمَا تَضَمَّخَ بِطِيبٍ؟ فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاعَةً، ثُمَّ سَكَتَ، فَجَاءَهُ الْوَحْيُ، فَأَشَارَ عُمَرُ بِيَدِهِ إِلَى يَعْلَى بْنِ أُمَيَّةَ: تَعَالَ، فَجَاءَ يَعْلَى، فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْمَرُّ الْوَجْهِ، يَغِطُّ سَاعَةً، ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَقَالَ: «أَيْنَ الَّذِي سَأَلَنِي عَنِ الْعُمْرَةِ آنِفًا؟» فَالْتُمِسَ الرَّجُلُ، فَجِيءَ بِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا الطِّيبُ الَّذِي بِكَ، فَاغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ، وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا، ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ، مَا تَصْنَعُ فِي حَجِّكَ»


Tamil-2195
Shamila-1180
JawamiulKalim-2026




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.